எல்லா இயக்குநர்களும் தங்களது  நடிகர்களை தங்களது படங்களில் அழகாக காட்சிப்படுத்த வேண்டும் என்கிற ஆசைப்படக்கூடியவர்கள். ஆனால் சில படங்களில் கதாநாயகன் கதாநாயகி ஆகிய இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரியைவிட இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கான கெமிஸ்ட்ரி எப்படி இருந்திருக்கும் என்று நாம் படம் பார்த்தே தெரிந்துகொள்ள முடியும்.  அப்படியான காம்போ பிற்காலத்தில் காதல் ஜோடிகளாக மாறி திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி படத்தில் நடித்து  பின் காதல்  தம்பதிகளான இயக்குநர் மற்றும்  கதாநாயகி ஜோடிகளைப் பார்க்கலாம்.


செல்வராகவன்  - சோனியா அகர்வால்




 செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் , 7 ஜி ரெயின்போ காலணி ஆகியப் படங்களில் நடித்தார் சோனியா அகர்வால். செல்வராகவனின் படங்களில் சோனியா அகர்வாலுக்கு ஒரு தனி இடம் எப்போது உண்டு. கதாநாயகனுக்கு எப்போதும் துணை நிற்கும், கதாநாயகனின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் சோனியா அகர்வாலை பொருத்தினார் செல்வா. கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த ஜோடி காதலித்து திருமணம் செய்துகொண்டது. ஆனால் திருமணமான அடுத்த நான்கு ஆண்டுகளில் தனிப்பட்ட காரணத்தினால் இந்த ஜோடி பிரிந்தது.


 


சுந்தர் சி – குஷ்பு




சுந்தர் சி இயக்கிய முதல் படமான முறைமாமன் படத்தில் நடித்தார் குஷ்பு. முந்தையதாக சின்ன தம்பி படத்தில் நடிகர் பிரபுவுடன் நடித்த குஷ்பு அவர்மேல் காதல் வயப்பட்டார். இருவரும் நான்கு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்தனர். இருவரின் திருமணத்திற்கு பிரபுவின் அப்பாவான சிவாஜி கனேசனிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வரவே தங்களது காதல் உறவை முடித்துக்கொண்டனர். இதன் பிறகு சுந்தர் சி யுடன் காதல் வயப்பட்ட குஷ்பு அவரை திருமணமும் செய்துகொண்டார். இன்றுவரை கலகலப்பான காதல் ஜோடியாக இருந்து வருகிறார்கள் இவர்கள்.


பாக்கியராஜ் – பூர்ணிமா




பாக்கியராஜ் இயக்கிய டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தின் கதாநாயகியாக நடித்தார் பூர்ணிமா. பாக்கியராஜின் முதல் மனைவியான ப்ரவீனாவின் மறைவிற்குப் பின் பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டார் பக்கியராஜ்.


 


ராஜகுமாரன் – தேவயானி




தேவயானி ராஜகுமாரனை முதல் முதலாக சந்தித்தது சூர்யவம்சம் திரைப்படத்தில் அவர் துணை இயக்குநராக இருந்தபோது. பின்பு தான் இயக்கிய நீ வருவாய் என படத்தில் தேவயானியை கதா நாயகியாக நடிக்க வைத்தார் ராஜகுமாரன். தேவயானியிடம் தனது காதலை வெளிப்படுத்தி அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் இவர்களின் காதலுக்கு தேவயானியின் குடும்பத்தின் சார்பாக கடுமையான எதிர்ப்பு வரவே இருவரும் தங்களது  வீட்டாரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்துகொண்டார்கள்.


 விஜய்  - அமலா பால்


ஏ.எல் விஜய் இயக்கிய தலைவா படத்தில் கதாநாயகியாக நடித்தார் அமலா பால். படப்பிடிப்பின் போது இந்த ஜோடி காதலிக்கத் தொடங்கினார்கள், பின் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் தனிப்பட்ட சில காரணங்களால இந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்தார்கள்.


தேசிங்கு பெரியசாமி -  நிரஞ்சனி




கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு ராஜா அந்தப் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்த நிரஞ்சனி அகத்தியனை திருமணம் செய்துகொண்டார். தேசிய விருது வென்ற இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது


விக்கி – நயன்




ஆர் யூ ஒக்கே பேபி என்று படம் முழுவதும் விஜய் சேதுபதியை வசனம் பேசவைத்தபோதே ரசிகர்களால் யூகித்திருக்க முடிந்திருக்கும் இந்த ஜோடி விரைவில் காதல் வயப்படும் என்று. தற்போது கோலிவுட்டின் மிகப் புகழ்பெற்ற தம்பதிகளில் விக்கி நயன் ஜோடியும் ஒன்று.