விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனி நடிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எப்போது அந்த செய்தி வரவுள்ளது என எதிர்ப்பார்ப்பும் தற்போது எகிறியுள்ளது.


தமிழ் சினிமாவில் முக்கிய இளம் இயக்குநர்களில் ஒருவர் தான் விக்னேஷ் சிவன். போடா போடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான் திரைப்படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் எதிர்த்தமான நடிப்பு ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  இதனையடுத்து நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் திபை்படமும் ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா சேர்ந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.





இதுப்போன்ற படங்களின் மூலம் மக்களின் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இளம் இயக்குனரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள செய்தி பெரும் எதிர்ப்பார்ப்பையும், வாழ்த்துக்களையும் ரசிகர்களிடம் பெற்றுத் தந்துள்ளது. “தல தோனியின் ரசிகரான இவர், சமீபத்தில் அவரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது தோனியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்“. அதில் எனது ரோல் மாடலான தல தோனியை சந்தித்த தருணத்தை வார்த்தைகளால்  விவரிக்க முடியாது எனவும், எனது இயக்கத்தில் தோனி நடிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.






சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர படத்திலோ அல்லது வேறு விளம்பர படத்திலோ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனி நடிக்கவுள்ளார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் யாரும் எதிர்ப்பார்த்திராத நேரத்தில் வெளிவந்த இந்த அறிவிப்பு தோனியின் ரசிகர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இன்ஸ்டாவில் இந்த அறிவிப்பைப் பார்த்த ரசிகர்கள், “ செம நியூஸ்,  வேற மாதிரி தல, எப்ப அறிவிப்பு, வி ஆர் வெயிட்டிங், வாழ்த்துக்கள்“ என்பது போன்ற பல கருத்துக்களையும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.