குடும்பத்திற்கு சிறந்த வருடம்:
இதுதொடர்பான விக்னேஷ் சிவனின் பதிவில், நன்றி, 2022 என்பது எனது வாழ்வின் சிறந்த ஆண்டு என என்னால் கூற முடியும். நடப்பாண்டு முதல் எனது வாழ்வில் எனக்கு கிடைக்க இருக்கும் பெரும்பாலான அனுபவங்களும், வயது மூப்பின் போது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறோம். ஆசிர்வதிக்கப்பட்ட முறையில் எனது வாழ்வின் காதலான நயன்தாராவை திருமணம் செய்து கொண்டேன். பெரிய ஆளுமைகள் மற்றும் சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் எனது வாழ்வின் சிறந்த சம்பவம் நிகழ்ந்ததால், எனது குடும்பத்திற்கு 2022 ஒரு சிறந்த வருடம்.
ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், அருகில் செல்லும்போதும் கண்களை கலங்க வைக்கும் விதமாக இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து ஆசிர்வதிக்கப்பட்டேன். எனது இதழ்கள் அவர்களை தீண்டுவதற்கு முன்பாகவே, எனது கண்ணீர் அவர்களை தொட்டு விடுகிறது. அந்த நேரங்களில் அதிகளவில் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணருகிறேன்.
மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்:
நான் மிகவும் விரும்பி இயக்கி, விடுதலை செய்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம், எப்போதும் எனது இதயத்திற்கு நெருக்கமானதாக இருக்கும். அத்த திரைப்படத்தில் சிறந்த நடிகர்கள் மற்றும் எனது கிங் அனிருத் ஆகியோருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கமர்சியல் ரீதியில் அந்த திரைப்படத்தை வெற்றி பெற செய்ததற்கு நன்றி. அடுத்த சில ஆண்டுகளுக்குப் பின் அந்த திரைப்படம், விமர்சன ரீதியிலும் கொண்டாடப்படும் என மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்.
மிகவும் சிறப்பு வாய்ந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை கையாள வாய்ப்பு அளித்த, தமிழக அரசுக்கு நன்றி. அந்நிகழ்ச்சிக்காக, மரியாதைக்குரிய அமைச்சரகள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் , இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த திறமைசாலிகளுடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின், ஏ.ஆர். ரகுமான், உலக நாயகன் கமல்ஹாசன் சார், அமைச்சர் உதயநிதி அண்ணா ஆகியோருடன், எனது தாயையும் அமர வைத்து உணவு உண்டது எனக்கு லைப் செட்டில் மெண்ட்.
ரசிகர்களுக்கு நன்றி:
ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் கன்னெக்ட் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. திரையரங்குகளுக்கு வந்து ஆண்டு இறுதியில் வெற்றி எனும் மகிழ்ச்சியை எங்களுக்கு கொடுத்ததுடன், படத்திற்கு சரியான மரியாதையை கொடுத்த அனைவருக்கும் எனது நன்றிகள். எனக்கான அனைத்து நம்பிக்கையையும் கொடுத்த நேர்மறையான எண்ணங்களுடன் முனோக்கி செல்ல நம்பிக்கை அளித்த உங்களுக்கு நன்றி.
ஏகே-62 அப்டேட்:
மிகப்பெரும் வாய்ப்பான ஏகே-62 மீது கவனம் செலுத்த எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். இந்த மிகப்பெரும் படத்தை முன்னெடுத்து செல்லும் அஜித் சார், லைகா புரொடக்ஷன் சுபாஸ்கரன் ஆகியோருக்கு நன்றி. ஆச்சரியமளிக்கும், ஆசிர்வதிக்கப்பட்ட மற்றும் கடின உழைப்பை கொண்ட புத்தாண்டை எதிர்நோக்குகிறேன். நீங்கள் செய்யும் அனைத்து காரியத்தின் ஒவ்வொரு பகுதியையும் கொண்டாடுவீர்கள் என நான் நம்புகிறேன். சிறு விஷயங்கள் தான் வாழ்விற்கு மகிழ்ச்சியளிக்கும் என்பதால், அனைவரும் அதன் மீது கவனம் செலுத்த வேண்டும். அதைதொடர்ந்து, பெரிய விஷயங்கள் அனைத்தும் தாமாகவே நடைபெறும். கடவுள் அனைவரையும் ஆசிர்வாதிக்கட்டும். பேரன்புடன் விக்கி என, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.