விக்னேஷ் சிவன்


அஜித்தின் 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார். அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து அவர் விலகினார். போடா போடி போடி படத்தின் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தில் கமர்சியல் ஹிட் கொடுத்தார், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் , விஜய் சேதுபதி வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அஜித் படம் கைவிட்டு போனதைத் தொடர்ந்து தற்போது பிரதீப் ரங்கநாதன் வைத்து எல்.ஐ.கே படத்தை இயக்கி வருகிறார். அஜித் படம் கைவிட்டு போனது தன்னை பாதித்தது பற்றி விக்னேஷ் சிவன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்


டிராகன்


அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் டிராகன்.கே. எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். லவ் டுடே படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன் படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் டிராகன் படம் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. டிராகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் விக்னேஷ் ஷிவன் கலந்துகொண்டார். 


பிரதீப் தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்






" என்னுடய வாழ்க்கையில் ரொம்ப சோர்வாக இருந்த நேரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஃபோன் செய்து பேசினேன். அப்போது உடனே எனக்கு ஒரு மீடிங் செட் பண்ணி கொடுத்து என்னுடய கதையை கேட்டு எனக்கு வாய்ப்பு கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன்" என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்