விடாமுயற்சி டீசர்
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் ஒருவழியாக வெளியாகியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக இப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் நடத்தாத போராட்டம் இல்லை. இரண்டு ஆண்டு காத்திருப்பிற்கு பலனளிக்கும் விதமாக விடாமுயற்சி படத்தின் டீசர் ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ளது என்று சொல்லலாம். தரமான மேக்கிங் , தெறிக்கவிடும் அனிருத் பின்னணி இசை , மாஸான தோற்றத்தில் அஜித் என விடாமுயற்சி படத்தின் மீது மீண்டும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
துணிவு படத்திற்கு பின் அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருந்தது. இதைத் தொடர்ந்து சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. இப்படம் கைவிடப்பட்டது குறித்து நேர்காணல் ஒன்றில் விக்னேஷ் சிவன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அஜித் படம் கைவிடப்பட்டது குறித்து விக்னேஷ் சிவன்
" அஜித் சார் என்னிடம் பேசியபோது நான் அதிகம் படங்கள் பார்க்கமாட்டேன். ஆனால் நானும் ரவுடிதான் படத்தை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். குறிப்பாக அந்த படத்தில் பார்த்திபனின் கதாபாத்திரம் எனக்கு ரொம்பவும் பிடித்தது. அந்த மாதிரியான ஒரு கதை இருந்தால் நாம் சேர்ந்து பணியாற்றலாம் என அஜித் என்னிடம் சொன்னார். அவர் சொன்னது போலவே துணிவு படத்திற்கு பின் மறுபடியும் எனக்கு ஃபோன் செய்தார். இந்த படம் முழுக்க முழுக்க என்னுடைய ஸ்டைலில் இருக்க வேண்டும் என்பது தான் அஜித் சாரின் ஆசை. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு ஒரு படம் இப்படிதான் இருக்க வேண்டும் என்று பல ரூல்ஸ் இருந்தன. ஒரு படத்திற்கான திரைக்கதையை எழுத தொடங்கும் போதே அந்த ரூல்ஸை எல்லாம் உடைத்து தான் நான் எழுதுவேன். ஆனால் படம் ஏன் காமெடியாக இருக்கிற்து. எமோஷன் , மெசேஜ் எல்லாம் வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த ஆவேஷம் படம் பார்த்தபோது அஜித் சாருக்கு நான் சொன்ன கதை மாதிரியே அது இருந்தது. அந்த மாதிரியான ஒரு படத்தி அஜித் சார் நடித்திருந்தால் அது ரொம்ப புதுசாக இருந்திருக்கும்" என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்