மீண்டும் சூரியை இயக்கும் வெற்றிமாறன் 

நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரியை விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தினார் வெற்றிமாறன. பல்வேறு படங்களில் தனது நகைச்சுவை மூலம் மக்களை சிரிக்க வைத்த சூரியால் இப்படியும் நடிக்க முடியுமா என விடுதலை படம் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து சூரி அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். கருடன் சமீபத்தில் வெளியான மாமன் அவருக்கு நல்ல வெற்றிப்படங்களாகவும் அமைந்துள்ளன.

Continues below advertisement

விடுதலை 1 & 2 பாகத்தைத்  தொடர்ந்து சூரியை வைத்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் புதிய அப்டேட் கொடுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன் சூரியை வைத்து ஒரு காமெடி திரைப்படம் எடுக்க திட்டமிருப்பதாக தெரிவித்துள்ளார்

நா முத்துகுமார் கவிதையை தழுவி உருவாகும் படம்

விடுதலை படத்திற்கு முன்பே நா முத்துகுமாரின் கவிதையை தழுவி வெற்றிமாறன் ஒரு படம் இயக்கவிருந்தார். சூரியை இந்த படத்தில் நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் விடுதலை படத்தை அவர் எடுக்க தொடங்கியதும் மொத்தமாக பிளான் மாறியது. தனது அப்பாவின் இறுதி சடங்கின்போது ஒரு மகனைப் பற்றிய கவிதையை நா முத்துகுமார் எழுதியுள்ளார். இந்த கதைக்கு சூரி மிகவும் பொருத்தமாக இருப்பார் என்றும் தற்போது இருக்கும் படங்களை முடித்துவிட்டு இந்த படத்தை எடுப்பதற்கான திட்டம் இருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். விடுதலை படத்திற்கு பின் சூரி மறுபடியும் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை தற்போது மறுபடியும் வெற்றிமாறன் இயக்கத்திலேயே அவர் ஒரு காமெடி படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement

எஸ்.டி.ஆர் வெற்றிமாறன் கூட்டணி

தற்போது வெற்றிமாறன் சிம்பு இயக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் டைட்டில் வீடியோ ஒன்றும் உருவாக இருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்தார். வடசென்னையை மையப்படுத்திய கதைக்களத்தில் சிம்பு இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷின் வட சென்னை 2 படமும் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது