அசுரன் படத்திற்கு தமிழ்நாடு அரசின் விருதை நிராகரித்த இயக்குநர் வெற்றிமாறன்! இதான் காரணம் !
அசுரன் படத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்பட்டது மாநில விருதினை பெற இயக்குநர் வெற்றிமாறன் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

2019 ஆம் ஆண்டில் வெளியான அசுரன் படத்திற்காக சிறந்த வசனத்திற்கான விருது வெற்றிமாறனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி விருது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொள்ளவில்லை. விருது வழங்கப்படுவதில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு மாற்று கருத்து இருந்ததாகவும் இதனால் தமிழ்நாடு அரசு விருதினை அவர் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் தற்போது தெரியவந்துள்ளது
2016 முதல் 2022 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை கலைவானர் அரங்கில் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு துணை முதலமைச்சர் கையால் விருது வழங்கப்பட்டது. தனுஷ் , சிவகார்த்திகேயன் , சூர்யா , ஏ ஆர் ரஹ்மான் ,சாய் பல்லவி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்
இந்த விருது அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாடு அரசின் திரைப்பட பரிந்துரை குழு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ரிலீஸே ஆகாத படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது . கேமியோ ரோலில் நடித்தவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சுட்டிகாட்டியபடி இருந்தார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் தமிழ்நாடு அரசு விருதினை நிராகரித்துள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது
விருது வாங்க மறுத்த வெற்றிமாறன்
கலைப்புலி தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படத்திற்கு சிறந்த முதலாவது படம் , சிறந்த வசனம் , சிறந்த நடிகை , சிறந்த துணை நடிகர் , சிறந்த கதை , சிறந்த பின்னணி பாடகி ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த வசனத்திற்காக வெற்றிமாறனுக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அசுரன் படத்தின் வசனங்களில் பெரும்பாலான பங்கு எழுத்தாளர் சுகாவிற்கு இருந்ததாகவும் இதனால் இந்த விருதினை அவருக்கு வழங்கும்படி வெற்றிமாறன் பரிந்துரை குழுவிடம் தெரிவித்துள்ளார் . அப்படி செய்யாததால் அதிருப்தி அடைந்த வெற்றிமாறன் இந்த விருதினை வாங்க மறுத்துள்ளார்.
அரசன்
வெற்றிமாறன் தற்போது சிம்பு நடிக்கும் அரசன் படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி தானு இப்படத்தை தயாரிக்கிறார். விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது கால் ஷீட் பிரச்சனை காரணமாக அவர் படத்தில் இருந்து விலகியுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்























