விடுதலை 2 படத்திற்கு பிறகு வெற்றிமாறன் யாரை வைத்து இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிம்பு நடிக்கும் படத்தால் நடிகர் தனுஷ் உடன் பிரச்சினை எழுந்ததாக வெளியான செய்திகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் அளித்திருக்கிறார். இப்படம் வடசென்னை 2 அல்லது வேறு படமா என்பது குறித்த முழு தகவல்களையும் அளித்துள்ளார்.
வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி
இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பான போஸ்டரும் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் சிம்பு. ஆனால், அப்படம் படப்பிடிப்பு நடத்தாமலேயே பேச்சுவார்த்தையோடு நின்றது. இந்நிலையில், நடிகர் சிம்புவின் 49-வது படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வடசென்னை 2 டிராப்பா?
இப்படம் வடசென்னை படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில், புரோமோ ஷூட் ஒன்றை வெற்றிமாறன் எடுத்துள்ளார். புரோமோ ஷூட் சிம்பு பங்கேற்றிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வைரலானது. இதனால், வடசென்னை பட உரிமையை வைத்திருக்கும் அதன் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பிரச்சினை எழுந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. வடசென்னை 2 டிராப் ஆனதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
வெற்றிமாறன் விளக்கம்
வெற்றிமாறன் சிம்பு படத்தை இயக்கவுள்ள நிலையில், அவரின் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இந்த பொய்யான தகவல்களுக்கு இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது அடுத்த படம் சிபம்புவடன் தான். இதற்கும் வடசென்னை படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், ஒரே கால கட்டத்தில் நடக்கும் கதையாக இது இருக்கும் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் பணம் கேட்கவில்லை
வடசென்னை படத்திற்காக தனுஷ் காப்புரிமை கேட்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அவர் என்த பணமும் கேட்கவில்லை. தனுசுக்கும் எனக்குமான உறவு ஒரு திரைப்படத்துடன் மாறக்கூடியதோ, பாதிக்கப்படக்கூடியதோ இல்லை. எங்களை பற்றி பரவும் செய்திகளை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது. அதே நேரத்தில், வாடிவாசல் திரைப்படத்தின் கதையை எழுதுவதில் தாமதம் ஆகிறது. அதுமட்டும் அல்ல தொழில்நுட்ப ரீதியாகவும், நடிகர்கள், விலங்குகளின் பாதுகாப்புக் கருதியும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாத சூழலில் தான் அடுத்த படம் குறித்து முடிவு செய்துவிட்டோம் என வெற்றிமாறன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.