Vetrimaaran: காதலிக்கும் பெண்ணை கொலை பண்ணுவீங்களா? - ஆவேசமான வெற்றிமாறன் - வைரல் வீடியோ!

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 ஆகிய 6 படங்களை மட்டுமே வெற்றிமாறன் 17 ஆண்டுகளில் இயக்கியுள்ளார்.

Continues below advertisement

இயக்குநர் வெற்றி மாறன் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் படம் இயக்குவது தொடர்பாக தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Continues below advertisement

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்து தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணி இயக்குநராக உள்ளவர்களில் முக்கியமானவர் வெற்றி மாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 ஆகிய 6 படங்களை மட்டுமே 17 ஆண்டுகளில் இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விடுதலை பாகம் 2 அடுத்ததாக வெளியாகவுள்ள நிலையில்,  வடசென்னை 2, வாடிவாசல் போன்ற படங்கள் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான நிலையில் வெற்றிமாறன் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பேசும் அவர், “காதலிக்கும் பொண்ணு நம்மை கல்யாணம் பண்ணவில்லை என்றால், பேசவில்லை என்றால் அவளை கொலை செய்ய வேண்டும் என நினைக்கும் ஆட்களை எனக்கு  பிடிப்பதில்லை. அதை கதையாக பண்ண நினைக்கிறவர்களையும் பிடிப்பதில்லை. நான் இந்த கருத்துக்கு மொத்தமும் எதிரானவன். பல பேருக்கு எப்படி படம் பண்ண வேண்டும் என தெரியும். எப்படி படமாக்க வேண்டும் என்று தான் தெரியாது. முன்னாடி படம் எடுக்குறது தான் கஷ்டமாக இருந்துச்சு. என்ன சொல்ல வருகிறாய் என்பது தான் முக்கியம்” என தெரிவித்திருப்பார். 

இதேபோல் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், ஒரு குறும்படம் எடுத்துவிட்டு அது நன்றாக இருந்தால் படமாக எடுக்கலாம். ஆனால் எல்லாவற்றும் முதன்மையான விஷயம் என்னவென்றால் ஆர்வம். நம்மை நாமே ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கேள்வி எழுப்பும் நிலை வரும். நம்ம வச்சிருக்க கதை நல்லாருக்கா, படம் எடுக்க முடியுமா?, நம்மளை கூட இருக்குறவங்களே நம்ப மாட்டுக்காங்களே என ஆயிரம் சுய கேள்விகள் வரும். அந்த நேரத்தில் அமைதியாக உட்கார்ந்து உங்களை நீங்களே நம்புங்கள். இலக்கில் கவனம் செலுத்துங்கள். அதன்பிறகு படம் எடுங்கள்" என படம் எடுப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசியிருப்பார். 


மேலும் படிக்க: DeAr Movie Review: குறட்டை பிரச்சினை.. சிக்கலில் கணவன் - மனைவி உறவு.. “டியர்” படத்தின் விமர்சனம் இதோ!

Continues below advertisement
Sponsored Links by Taboola