நடிகர் வடிவேலுவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரைத் தொடர்ந்து நாய் சேகர்  ரிட்டன்ஸ் படத்தின் இயக்குநர் சுராஜூக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 


முன்னதாக, சுந்த சியிடம் உதவி இயக்குநரான பணியாற்றிய சுராஜ் மூவேந்தர் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தலை நகரம், மருதமலை, மருதமலை,படிக்காதவன், மாப்பிள்ளை , அலெக்ஸ் பாண்டியன், சகலகலா வல்லவன், கத்தி சண்டை போன்ற படங்களை இயக்கினார். தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் வடிவேலுக்கு விடுக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுராஜின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கமிட் ஆனார் வடிவேலு. அதனைத் தொடர்ந்து படக்குழு படப்பிடிப்பிற்காக லண்டன் சென்று திரும்பிய போது வடிவேலுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 






 


இந்த சூழலில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.


அப்போது அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், “ வடிவேலு, தயாரிப்பாளர் தமிழ்க்குமரன் ஆகியோருக்கு தொற்று உறுதியானதால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். வடிவேலும் எஸ் ஜீன் டிராப் உறுதியானது. தற்போது அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.


இயக்குநர் சுராஜுக்கு நெகட்டிவ் என்று வந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு அவரை நலம் விசாரித்தபோது தனக்கு சளி இருப்பதாக தெரிவித்தார். எனவே அவரை பரிசோதிக்குமாறு மருத்துவருக்கு அறிவுறுத்தியுள்ளேன். மற்றபடி மூன்று பேரும் நலமாகவே இருக்கிறார்கள் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது சுராஜூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.