தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சிவகுமார், மோகன் உள்ளிட்ட பல பிரபலங்களை வைத்து திரைப்படங்கள் இயக்கிவர் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன். இவர் சமீபத்தில் கங்கை அமரனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

Continues below advertisement

நண்பன் ஜெயிச்சுட்டான்:

பாக்யராஜ் வசனம் எழுதிட்டு என்கிட்டு கொடுப்பான். இதை பாரு. இதுல ஏதாவது சேர்க்க வேண்டி இருக்கிறதா? எது நல்லா இருக்கிறதா? என்று பாரு என்பான். இன்று பாக்யராஜ் படம் ரிலீஸ். என் கையில் 2 ரூபாய் இருக்கிறது. நண்பனின் படத்தைப் பார்த்தால் பட்டினி கிடக்க வேண்டும். படத்தைப் பார்க்காமலும் இருக்க முடியாது.

படத்தைப் பார்க்கலாம்னு மெளன கீதங்கள் படம் பார்க்க போய்விட்டேன். படம் முடிந்து உறைஞ்சு உட்காந்துட்டேன். கூட்றவங்கதான் எழுந்து போகச் சொன்னாங்க. அந்த படம் பார்த்தபோதுதான் பாக்யராஜ் இரண்டு பேரும் போலாம்டா, டைரக்டர் ஆகலாம்னு பேசும்போது தெரியல, இங்க வந்தப்ப தெரியல, அவன் பேசுனப்ப தெரியல, அவன் நடிச்சப்ப தெரியல, சுவரில்லா சித்தரங்களப்ப தெரியல, ஒரு கை ஓசை அப்போ தெரியல மெளன கீதங்கள் படம் பார்த்துட்டுதான் நாம இல்லனாலும் நம்ம நண்பன் ஜெயிச்சுட்டான். 

Continues below advertisement

பாக்யராஜை பார்க்க மறுத்த சுந்தர்ராஜன்:

நாம இல்லனா கூட நண்பன் ஜெயிக்குற திறமை இருக்குனு தோணுச்சு. இவனுக்கு நான் ஒரு சீன் சொன்னேன். டயலாக் சொன்னேன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. முழு ஸ்கிரிப்ட் வந்துருச்சு. சுயமாவே வளந்துட்டான். இப்போ நான் என்ன பண்றது? நமக்கு வர மாட்டேங்குது? இதுதான் பிரச்சினை.

படம் முடிஞ்சு வெளிய வராங்க. பழனிச்சாமி எங்கூடதான் இருந்தான். பாக்யராஜ் உன்னை கூப்பிட்றானு சொன்னான். அப்போ 3 வருஷத்துக்கு அப்புறம் அவனை பாக்குறேன். பாக்யராஜ் கூப்பிட்டான்.  நான் பாட்டுக்கு போயிட்டான். அண்ணாசாலையில காசில்லாம நடந்து போறேன். கடையில இருந்து அண்ணன் பணம் அனுப்பிடுவாரு.

அப்போ, மணியார்டரில் பணம் வர 3 நாட்கள் ஆகும். ஆனால் பத்தாது ஒரு மாசத்துக்கு அப்போ 500 ரூபாய் அனுப்பினாலும் அப்போது 10 நாட்களிலே தீர்ந்துவிடும். தினமும் 4 சினிமா, பிரியாணினு சாப்பிட்டால் எப்படி? இந்த சூழலில் நான் நடந்து சென்று கொண்டிருக்கிறேன்.

கல்லை எடுத்து அடிக்கச் சென்றேன்:

ஒரு பென்ஸ் கார் வந்து நிற்கிறது. தயாரிப்பாளர் பர்வேஸ் காரை பாக்யராஜுற்கு கொடுத்தாரு. பாக்யராஜ்தான் காரை ஓட்டிட்டு வர்றான். பழனிச்சாமி, இரண்டு அசிஸ்டண்ட் உள்ளே இருக்காங்க. அப்போ பாக்யராஜ் இறங்கி வரல. பழனிச்சாமி தேனாம்பேட்டை வரை கொண்டு போயி விட்றோம்னு சொல்லிப்பாத்தாங்க. கீழே இருந்து கல்லை எடுத்துட்டேன். போடானு சொன்னேன். பாக்யராஜை யாராவது திரும்பி பாத்தா கோயம்புத்தூர்ல அடிப்பேன். அப்படி இருக்கும்போது, இவன் என்ன சொல்லி நாம பாக்யராஜ் பக்கத்துல உட்கார்றது?

அப்போ, அவன் சொன்னா கேக்க மாட்டான்டா. வாட பாேவோம் பழனீினு பாக்யராஜ் கிளம்பி போயிட்டான். எந்த அண்ணாசாலையில் நானும் பாக்யராஜும் நடந்து போனோமோ? அவன் பென்ஸ் காரில் போறான். நான் பசியோடு நடந்து போறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

பாக்யராஜுற்கும் சுந்தர்ராஜனுக்கும் இதன்பின்னர் மிகவும் நெருடலான உறவே இருந்து வந்துள்ளது. அதன்பின்னர், பயணங்கள் முடிவதில்லை படம் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்த சுந்தர்ராஜன் வைதேகி காத்திருந்தாள், மெல்லத் திறந்தது கதவு, ராஜாதி ராஜா, குங்குமச்சிமிழ், என் ஆசை மச்சான் என பல வெற்றிப்படங்களை இயக்கினார்.