சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து சுதா கொங்காரா இயக்கியுள்ள பராசக்தி வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தான் கூடிய விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக சுதா கொங்காரா கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது 

Continues below advertisement

2010 ஆம் ஆண்டு துரோகி படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்காரா. முதல் படம் விமர்சன ரீதியாக கவனிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. இந்தி , தெலுங்கு படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்த சுதா கொங்காரா 2016 ஆம் ஆண்டு மாதவனை வைத்து இறுதி சுற்று படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு கைகொடுத்தது. தொடர்ந்து  சூரரைப் போற்று தேசிய விருது வென்று சூர்யாவின் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது . 

பராசக்தி

தற்போது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகியுள்ள பராசக்தியை இயக்கியுள்ளார் சுதா கொங்காரா. டான் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ரவி மோகன் , ஶ்ரீலீலா , அதர்வா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பராசக்தி இசை வெளியீடு வரும் ஜனவரி 3 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நிகழ்ந்த போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது 

Continues below advertisement

ஓய்வு பெற விரும்பும் சுதா கொங்காரா

பராசக்தி படத்தின் ப்ரோமோஷனின் போது சுதா கொங்காரா சில சுவாரஸ்தமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் . ரஜினிகாந்தை வைத்து முதல் மரியாதை மாதிரியான ஒரு படத்தை இயக்க தனக்கு ஆசை இருப்பதாக அவர் கூறினார். அதே நேரத்தில் கூடிய விரைவில் தான் சினிமாவில் இருந்தும் ஓய்வு பெற விரும்புவதாகவும் தான் ரொம்ப சோர்வடைந்துவிட்டதாகவும அவர் தெரிவித்துள்ளார்.