இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் சரித்திர புனைவன வேள்வாரி நாவலை படமாக இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் சூர்யா இப்படத்தில் நடிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Continues below advertisement

வேள்பாரி படப்பிடிப்பு 

தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்டமான படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஷங்கர். ஆனால் அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களும் வசூல் ரீதியாக பெரிய தோல்வியைத் தழுவின. இதனால் அடுத்தபடியாக வெளியான இருந்த இந்தியன் 3 படமும் வெளியாகாமல் நிலுவையில் உள்ளது. இன்னொரு பக்கம் ஷங்கர் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பிற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். சு வெங்கடேசன் எழுதிய சரித்திர நாவலான வீரயுக நாயகன் வேள்பரி நாவலை ஷங்கர் அடுத்தபடியாக படமாக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் துவங்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஷங்கருடன் இணைகிறாரா சூர்யா ?

இப்படத்தில் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் இருந்து பல்வேறு நடிகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் இருந்து சூர்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள கருப்பு திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில் சூர்யா ஷங்கர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன 

Continues below advertisement