ஹீரோ யாரென்றே தெரியாமல் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ஷங்கர்! என்ன படம் தெரியுமா?

ஷங்கர் இயக்கி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற தமிழ் படமொன்றின் கதாநாயகன் யாரென்று தெரியாமலே படப்பிடிப்பை தொடங்கிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

Continues below advertisement

இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். ஜென்டில்மேன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் ப்ளாக்பஸ்டர் படங்கள் ஆகும்.

ஹீரோ யாரென்றெ படத்தை தொடங்கிய ஷங்கர்:

Continues below advertisement

ஷங்கர் இயக்கத்தில் தவெக தலைவர் விஜய் நடிப்பில் வெளியாகிய படம் நண்பன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஆகும். இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவானது. இந்த படத்தில் விஜய்யுடன் நடிகர்கள் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் அவரது நண்பர்களாக நடித்திருப்பார்கள்.

நண்பன் படத்தை தொடங்கியபோது அந்த படத்தின் கதாநாயகன் யார்? என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, நடிகர் ஸ்ரீகாந்த் கூறியிருப்பதாவது, “ ஒரு கட்டத்திற்கு மேல் ஷங்கர் சார் வெறுத்துவிட்டார். நம்மளோட பாரிவேந்தன் யார்னு தெரியாது நமக்கு. நம்மளோட இரண்டு ஹீரோஸ் வைச்சுகிட்டு நம்ம போயிடலாம். அப்போ யாரு வர்றாங்களா அவங்களை வண்டியில ஏத்திக்கலாம்.

ஸ்ரீகாந்தை முறைத்துப் பார்த்த விஜய்:

படப்பிடிப்பு அப்படித்தான் தொடங்கியது. அங்க விஜய்யோட கதாபாத்திரத்தை யார் பண்றாங்கனு தெரியாமலே இருந்துச்சு. முதல்ல லுக் டெஸ்ட்டுக்கு போகும்போது நான் உள்ளே போறப்ப விஜய் எதிர வந்தாரு. நான் அண்ணே செமயா இருக்குதுனேனு சொன்னேன். அவரு முறைச்சுப் பாத்துட்டு உன்ட அப்புறம் பேசிக்குறேன்னு சொல்லிட்டு போனாரு.

நான் நல்லா இருக்குதுனுதானே சொன்னேன். இவரு வேற மாதிரி ரியாக்‌ஷன் கொடுக்குறாரே. நம்ம ஏதும் தப்பா சொல்லிட்டாமானு யோசிச்சேன். உள்ள எல்லாம் முடிச்சுட்டு வெளில வந்தப்பதான் சொல்றாங்க அவர் படத்துல இருந்து விலகிட்டாருனு. எனக்கு ஷாக். ஏதோ படத்துல கமிட்டானதால முடி வெட்டுனதால விலகுனதால கேள்விபட்டோம். அதுக்கு அப்புறம் அந்த கேரக்டருக்கு மகேஷ்பாபுவா? சூர்யாவா?னு ஒவ்வொ வாரமும் ஒரு பேரு வரும். அதை நம்பி நான் 5 படத்துக்கு அட்வான்ஸ் திருப்பிக் கொடுத்துட்டேன்”

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், மாதவன், ஷர்மன் ஜோசி நடிப்பில் உருவான 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் வெளியானது. ஜெமினி ப்லிம் தயாரித்த இந்த படத்தில் நாயகனாக நடிக்க விஜய், சூர்யா, மகேஷ்பாபு பெயர்கள் தொடர்ந்து அடிபட்டது. இதையடுத்து, விஜய் நாயகனாக இலியானா நாயகியாக நடித்த இந்த படம் 2012ம் ஆண்டு வெளியான படங்களில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  

Continues below advertisement