கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் வெற்றியை பதிவு செய்தது. கே.ஜி.எஃப் திரைப்பத்தின் முதல் பாகம் அடுத்த பாகத்தின் தொடர்ச்சியோடு முடிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக முழு வீச்சில் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கொரோனா காலக்கட்டத்தால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ஆம் தேதி படம் வெளியானது.
இந்தப்படம் வெளியானது முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடர்ந்து நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது. மேலும், ‘கேஜிஎஃப் 2’ உலகளவில் 1000 கோடி ரூபாய் கடந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், கேஜிஎப் 2 திரைப்படத்தை பார்த்து படக்குழுவை ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி தள்ளியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இறுதியாக கேஜிஎப் திரைப்படத்தை பார்த்துவிட்டேன். படத்தின் கதை,திரைக்கதை & எடிட்டிங் அனைத்தும் மிக அருமையாக இருந்தது. கதை ஒரு அழகான நகர்வு, இன்டர்கட் ஆக்ஷன்&உரையாடல் அனைத்துமே சூப்பர். புதுப்பிக்கப்பட்ட மாஸ் 4 ஸ்டைல் தி பவர்ஹவுஸ். இப்படியான கதையில் நடித்த யஷ்க்கு நன்றி. இயக்குநர் பிரசாந்த் நீல் "பெரியப்பா" அனுபவத்தை சிறப்பாக கொடுத்துள்ளார். அன்பறிவுக்கும் நன்றி என்று இயக்குநர் ஷங்கர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘2.ஓ’ படத்தின் வசூலை கேஜிஎப் 2 பீட் செய்தது. தமிழில் இதுவரை எந்தப்படமும் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை. தெலுங்கில் பாகுபலி 2, ஆர்ஆர்ஆர். கேஜிஎஃப் 2 படங்கள் ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. தென்னிந்திய சினிமாவிற்கு முன்னோடியாக இருக்கும் தமிழ் சினிமா ஆயிரம் கோடி வசூலிக்காததை ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்