தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக உள்ள ஆர்யன் படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார்.
நடிப்பா? இயக்கமா?
இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இதில் என்ன வில்லன்? எல்லாம் கதாபாத்திரங்கள்தான். ஒவ்வொரு படமும் சந்தோஷமாக பண்ணுகிறோம். கூடிய சீக்கிரம் வேற கதாபாத்திரம் பண்ணுறோம். வெயிட் பண்றோம். இன்னமும் நான் இயக்குனர்தான். நடிப்பு என்பது ஜஸ்ட். சாணிக்காயிதம் ரொம்ப ஃபோர்ஸ் பண்ணி பண்ணதாலதான் பண்ணேன்.
நடிப்பு கஷ்டமா? இயக்கம் கஷ்டமா? என்ற கேள்வி இருந்தது. 5, 6 நாள் கழித்துதான் நடிப்பில் இவ்வளவு பொறுப்பு இருக்கிறதா? கையை பார்த்துக் கொள்ளனும், காலைப் பார்த்துக்கனும், முகத்தைப் பார்த்துக்கனும். அங்கிட்டு இங்கிட்டு திரிஞ்சு படம் எடுக்குறது வேற, நடிப்பு எல்லாம் ரொம்ப யோசிச்சு யோசிச்சு பண்ணனும்.
விஷ்ணு விஷால் அர்ப்பணிப்பு:
விஷ்ணு விஷாலை நான் சந்தித்து வேலை பார்த்தது இல்லை. நல்லவொரு கதை எடுத்து பண்ணனும். இந்த டீம், விஷ்ணு விஷால் வீட்டுக்கே போகமாட்டாங்க. ஷுட்டிங் போயிட்டே இருப்பாங்க. ஒரு ஹீரோ இங்கயே கிடக்குறாரு. இந்த படம் நல்லா வரனும். அந்த ஷாட் நல்லா வரனும். அந்த விஷயம் நல்லா வரனும். ஒரு சினிமாவை நேசிக்குற, சினிமாவை காதலிக்குற அந்த மாதிரி இருக்கவங்க ரொம்ப கஷ்டம்.
சில பேர் பணத்துக்கு வருவான், சில பேர் வேலை. ஆனால், அவருக்கு இதுதான் எல்லாமே. சுவாசிக்குற ஒரு ஹீரோ. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இயக்குனர் ப்ரவீன் சின்ன விஷயத்தையும் சரியா சொல்ல சொல்லுவாரு. சினிமாவையும் இவ்வளவு தூரம் நேசிக்குறவங்களுக்கு. நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அறிமுக இயக்குனர் ப்ரவீன் இயக்கியுள்ள இந்த படம் ராட்சசன் படம் போல சைகோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 31ம் தேதி ரிலீசாகிறது. 48 வயதான செல்வராகவன் துள்ளுவதோ இளமை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அவரது காதல் கொண்டேன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் புதுமையான படமாகவே அமைந்தது. கடைசியாக நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன் தற்போது 7ஜி ரெயின்போ காலனி பாகம் 2 படத்தை இயக்கி வருகிறார். மேலும், விரைவில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2-ஐ இயக்க உள்ளார்.