முதலமைச்சர் விஜயை சந்தித்து புகைப்படம் எடுப்பதை விட, சந்திக்காமல் இருப்பதே மரியாதை என நடிகரும், இயக்குநருமான சசிகுமார் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

முதல்வர் விஜயை சந்திக்கும் பிரபலங்கள்

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சி தலைவர்  விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், அரசியலில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முதலமைச்சர் பதவியை பெற்றது இன்னும் பலராலும் நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. இப்படியான நிலையில் ஒவ்வொரு நாளும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் விஜயை தலைமைச் செயலகத்திலும், இல்லத்திலும் சந்தித்து பலரும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Continues below advertisement

இது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பி வருகிறது. தமிழ்நாட்டில் பல பிரச்னைகளை தீர்க்க வேண்டிய இடத்தில் இருந்துக்கொண்டு அதனை திசை திருப்பும் வண்ணம் சினிமா பிரபலங்களுடன் முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் என விமர்சித்து வருகின்றனர். 

Also Read: விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!

முதல்வர் விஜயை சந்திக்க மாட்டேன்

இந்த நிலையில் நடிகரும், இயக்குநருமான சசிகுமார் நேர்காணல் ஒன்றில் முதலமைச்சர் விஜயை ஏன் இன்னும் சந்திக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், “விஜய் முதலமைச்சரான பிறகு நான் போய் பார்க்கவில்லை. ஆனால் அவர் நடிகராக இருந்தபோது நேரில் சென்று கதை சொல்லியிருக்கிறேன். தொந்தரவு இருக்கக்கூடாது என்று தான் நான் அவரைப் பார்க்கவில்லை. முதலமைச்சரான பிறகு விஜய்க்கு வேலைகள் அதிகமாக இருக்கும். எல்லாரும் அப்பாயின்மென்ட்  வாங்கிவிட்டு சென்று பார்க்கலாம். முதலமைச்சர் பதவி என்பது முள் கிரீடம் என சொல்லலாம். அது ஒன்றும் எளிதானது இல்லை. ஒவ்வொரு நாளும் விஜய் நிறைய விஷயங்களைப் பார்க்க வேண்டும், நிறைய விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். பல விஷயங்களைப் பதில் சொல்ல வேண்டும் என இருக்கிறது. அதற்காக தான் அந்த பதவிக்கு வந்துள்ளார். 

நான் அவருடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் மகிழ்ச்சி தான். இருந்தாலும் விஜயை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நான் கொடுக்கும் மரியாதையாகப் பார்க்கிறேன். சினிமாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லோருடனும் புகைப்படம் எடுக்க முடியாது. விஜய்க்கு யார் ரொம்ப நெருக்கமாக இருந்தார்களோ அவர்கள் தான் சென்று பார்த்திருக்கிறார்கள். நாம் விஜயை தூரத்தில் இருந்து தான் இப்போதும் பார்க்கிறேன். 

நானெல்லாம் அரசியல் வருகிறேன் என சொன்னால் ரசிகர்கள் சிரித்து விடுவார்கள். எனக்கு இயக்கம், நடிப்பு தான். அதில் நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு என்ன வருமோ, அதைத்தான் பார்க்க முடியும்” என தெரிவித்துள்ளார்.