Ravi Shankar Varushamellam Vasantham Director Passes Away: இயக்குநர் விக்ரமன் திரைப்படங்களில் பணிபுரிந்தவரும், 2002ஆம் ஆண்டு வெளியாகி கவனமீர்த்த வருஷமெல்லாம் வசந்தம் பட இயக்குநருமான ரவி ஷங்கர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாக்யா இதழில் வெளிவந்த குதிரை என்ற சிறுகதை மூலம் நடிகர், இயக்குநர் பாக்யராஜை ஈர்த்த ரவி ஷங்கர், அதன் பின் பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றினார். ரவிஷங்கர் வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தினை இயக்கியதுடன் சூர்யவம்சம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆல்டைம் சூப்பர் ஹிட் பாடலான ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ எனும் பிரபல பாடலின் வரிகளை எழுதியவரும் ஆவார்.


பிரபல இயக்குநர் விக்ரமனிடம் பணியாற்றிய ரவிஷங்கர் தான் இயக்கிய வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தில் சிற்பி இசையில் அமைந்த அடி அனார்கலி, எங்கே அந்த வெண்ணிலா, முதல் முதலாய் ஆகிய சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.


இந்நிலையில் ரவிஷங்கர், சென்னை, கே.கே.நகரில் உள்ள தன் வீட்டின் அறையில் நேற்றிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



63 வயதான ரவிஷங்கர், திருமணம், குடும்பமின்றி தனியே வசித்து வந்த ரவிஷங்கர் மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ


Indian 2 Box Office: உலக அளவில் ரூ.50 கோடி! ஜெட் வேகத்தில் கமல் - ஷங்கர் கூட்டணி: இந்தியன் 2 முதல் நாள் வசூல் நிலவரம்!