வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின் (Train) படத்தின் இசை  மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் மடோன் அஷ்வின், பி எஸ் வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

ட்ரெயின் படம் குறித்து விஜய் சேதுபதி

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி 'இன்னைக்கு எங்களை வாழ்த்த வந்த அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி எனக்கு பேசறது நிறைய வார்த்தை இல்ல நான் ரொம்ப கவனிச்சுட்டு இருந்தா இது எல்லாமே எனக்கு கிடைத்த பெருமை இல்லை மிஷ்கின் சாருக்காக தான் நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி இந்த படம் எப்ப வரும்னு நாங்க காத்துட்டு இருந்தோம் தானு சார் ஆகஸ்டுல கொண்டு வரேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும்போது இவர் கிட்ட ஆடிஷன் போயிருக்கேன். நான் ஹீரோ ஆனதுக்கப்புறம் ஒரு டைம் என்னை கூப்பிட்டாரு கொஞ்சம் சைக்கோ மாதிரி இருப்பார் நான் டேட் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன் சைக்கோ படம் பார்த்ததுக்கு அப்புறம் இவரை எனக்கு ரொம்ப புடிச்சுசு சைக்கோ படம் பார்த்து முடிச்சுட்டு மிஷ்கின் கிட்ட எட்டு மணி நேரம் பேசினேன் எனக்கு ஒரு வாட்ச்  கொடுத்தார் பிசாசு 2 படத்துல ரெண்டு நாள் வொர்க் பண்ணினேன் அதுக்கு அப்புறம்தான்  ட்ரெயின் மூவி நடிச்சேன் செட் கலகலனு இருக்கும் மிஷ்கின் சார் நல்லா நடிக்கிறவங்களுக்கும் நல்லா வேலை செய்றவங்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது அதனால எல்லோரும் சந்தோஷமா வேலை செஞ்சாங்க இவரை சுத்தி இருக்குற எல்லாருக்கும் சந்தோஷமா வச்சு பாரு அறிவு அன்பு இரண்டையும் பகிர்ந்து கொள்வார்கள் இந்தப் படம் உங்களுக்கு திர்லரா இருக்கும் ஆனா எனக்கும் மிஷ்கின் சார்க்கு ரொம்ப ரொமான்டிக் ஐ லவ் யூ மிஷ்கின் சார் என் கூட நடிச்ச எல்லாருக்கும் ரொம்ப நன்றி எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போங்க." என்று கூறினார் 

மிஷ்கின் பற்றி ராம் 

இயக்குநர் ராம் பேசுகையில் "ஒரு ஆறு வருடம் கழித்து மிஷ்கின் காக நடக்கிற ஒரு இசை வெளியீட்டு விழா. இந்த ஆறு வருஷத்துல இரண்டு படம் எடுத்து முடிச்சிட்டான். ஒரு இயக்குனர் எவ்ளோ கஷ்டப்படணுமோ அதை எல்லாமே அவர் பட்டு இருக்கிறார். இந்த ஆறு வருஷத்தில் அவருடைய அவமானங்கள் அவதூறுகள் எல்லாத்தையும் நான் நேர்ல பார்த்திருக்கேன். எல்லாத்தையும் தாங்கிக் கொண்ட ஒரு மனிதர். ஏமாற்றங்கள் நம்பிக்கை துரோகங்கள் அத்தனையும் ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்துல தாக்கினால் காணாமல் போயிடுவார். மிஷ்கின் இடது கையில் தள்ளிவிட்டு நிற்கிறார். அது அவர் மனிதர்கள் மேலே வைத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கை. மிஷ்கின் படம் குற்றம் நம்பிக்கை இரண்டும் இருக்கும். தமிழ் சினிமாவின் திரில்லர் படத்தினுடைய தந்தை இவர்தான் நீங்க எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இந்த உலகத்தில் நடக்கிற தீமைக்கு உங்களுக்கும் பங்கு இருக்கு. மிஷ்கின் கொலையை ரசித்து ரசித்து எடுப்பார் அவர் படத்தில் அவர்களுடைய நியாயம் புரிய வைக்கும்.  செத்துப் போவதற்கு காரணம் அவர்களாகவே இருப்பா இறுதியில் அவர்கள் மீது கருணை வரும் அதுதான் மிஸ்கின் உடைய மொத்த உலகம். விஜய் சேதுபதி நகைச்சுவை கதாபாத்திரங்களை மிக சிறப்பாக கையாளுகிறார், கமல் சாருக்கு பிறகு நல்ல கையாண்டு இருக்கிறார். அவருடைய படம் பார்க்கவும் ஆர்வமா இருக்கேன். தானு எல்லாத்துக்குமே ரெடியா இருக்கக் கூடிய புலி தான் ட்ரெயின் படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். 'என்றார்

Continues below advertisement