தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பிரபுசாலமன். கண்ணோடு காண்பதெல்லாம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவருக்கு மைனா படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அதன்பின்பு, அவர் இயக்கிய கும்கி படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. 

Continues below advertisement

கும்கி 2:

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிய அந்த படம் யானை - யானை பாகன் - மலைவாழ் மக்கள் என அழகிய கிராமப்படமாக பட்டிதொட்டியெங்கும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில், கும்கி படத்தின் பாகம் 2-ஐ பிரபு சாலமன் இயக்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிய நிலையில், பின்னர் அது உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், கும்கி 2 படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இநத படத்தில் கதாநாயகனாக மதி நடித்துள்ளார். வில்லனாக அர்ஜுன்தாஸ் இந்த படத்தில் நடிக்கிறார். முதல் பாகத்திற்கு இமான் இசையமைத்த நிலையில், இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

Continues below advertisement

யானையும், இளைஞனும்:

இந்த படத்தை பென் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கும்கி படத்தின் முதல் பாகத்தைப் போலவே இந்த படமும் பசுமை நிறைந்த இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சிறுவயது முதலே ஒன்றாக வளரும் யானையும், இளைஞனும் எதிர்கொள்ளும் சிரமும், அதன் இடையே வரும் காதலும் படத்தின் கதைக்களம் ஆகும். 

எப்போது ரிலீஸ்?

கயல் படத்திற்கு பிறகு அவர் இயக்கிய தொடரி, காடன், செம்பி படங்கள் பெரியளவு வெற்றி பெறவில்லை. சுமார் 10 வருடங்களாக எந்த வெற்றிப்படமும் தராத பிரபு சாலமன் தனக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது கையில் எடுத்துள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டீசருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.