2007 ஆம் ஆண்டு திருத்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானவர் பொன்ராம். முதல் படம் பெரியளவில் கைகொடுக்கவில்லை என்றாலும் சிவகார்த்திகேயனை வைத்து இவர் இயக்கிய வருத்தப்பட்டாத வாலிபர் சங்கம் திரைப்படம் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. இதே கூட்டணியில் வெளியான ரஜினி முருகன் படமும் கமர்சியல் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த கூட்டணியில் வெளியான இருபடங்களும் நகைச்சுவைக்காவே மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. 

Continues below advertisement

அடுத்தடுத்து தோல்விகள் 

சிவகார்த்திகேயன் உடன் இரண்டு வெற்றிப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக சீமராஜா படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தடுத்து வெளியான எம்.ஜி.ஆர் மகன் , டிஎஸ்பி , அண்மையில் வெளியான கொம்புசீவி ஆகிய படங்களும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்ல. தனது படங்கள் அடுத்தடுத்து தோல்விக்கான காரணம் குறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பொன்ராம் பேசியுள்ளார்

டிரைவர் டூ இயக்குநர்

" ஒரு டிரைவராக இருந்து படிப்படியாக வளர்ந்து தான் நான் இயக்குநரானேன் . நகைச்சுவை என்னுடைய படங்களின் மிகப்பெரிய பலமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான என்னுடைய படங்களில் அந்த நகைச்சுவை அம்சம் குறைவாக இருந்ததே அந்த படங்களின் தோல்விக்கு காரணம் . இனி எடுக்கும் படங்களில் பழைய ஸ்டைலில் எடுப்பேன். நகைச்சுவையே இந்த படங்களின் முக்கிய அம்சமாக இருக்கும்." என்று பொன்ராம் பேசியுள்ளார்

Continues below advertisement

கைகொடுப்பாரா சிவகார்த்திகேயன் 

சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் இன்னொரு படம் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்து மாஸ் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் அவர் நடிக்கும் சேயோன் திரைப்படம் கிராமத்து பின்னணியில் மாஸ் திரைப்படமாக உருவாக இருக்கிறது. அதே நேரம் மீண்டும் நகைச்சுவை அம்சமுள்ள படங்களில் தான் நடிக்க தயாராக இருப்பதாகவும் எஸ்.கே தெரிவித்துள்ளார். தனக்கு இரு படங்க்ள் ஹிட் கொடுத்த பொன்ராம் கம்பேக் கொடுக்க சிவகார்த்திகேயன் கைகொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்து வருகிறது .