இனி இதுதான் காம்போ! சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் கூட்டணி சேர்ந்த விஜயகாந்த் மகன்!

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் கேப்டனாக கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் விஜயகாந்த். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, பொன்மனச் செம்மல், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், ரமணா, சொக்கத்தங்கம் என ஏராளமான ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்தவர். மறைந்த விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகப்பாண்டியன்.

Continues below advertisement

பொன்ராம் இயக்கத்தில் சண்முகப்பாண்டியன்:

கடந்த 2015ம் ஆண்டு சகாப்தம் என்ற படம் மூலமாக இவர் தமிழில் நாயகனாக அறிமுகமானார். அடுத்து மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் பெரியளவு வரவேற்பை பெறாவிட்டாலும் விஜயகாந்தின் ரசிகர்கள் சண்முகப்பாண்டியன் படங்கள் மீது எதிர்பார்ப்புடன் உள்ளனர். படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

தற்போது படைத்தலைவன் படத்தில் நடித்து முடித்துள்ள விஜயகாந்த், புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்க உள்ளார். இது தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி பெறுவார்களா?

2007ம் ஆண்டு திருத்தம் என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான பொன்ராமிற்கு அந்த படம் பெரியளவு வெற்றியைத் தரவில்லை. இதையடுத்து, அவர் 2013ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன், சூரி மற்றும் பொன்ராம் மூன்று பேருக்கும் மிகப்பெரிய ஏற்றத்தை திரைவாழ்வில் தந்தது. சிவகார்த்திகேயனை வைத்து இவர் அடுத்து இயக்கிய ரஜினிமுருகனும் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பொன்ராம் உருவெடுத்தார்.

அடுத்தடுத்து இவர் இயக்கிய சீமராஜா, எம்.ஜி.ஆர்.மகன் மற்றும் டி.எஸ்.பி. பெரியளவு வெற்றி பெறாத நிலையில் இவர் தற்போது விஜயகாந்த் மகனுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கப் போராடி வரும் சண்முகபாண்டியனுக்கும், இயக்குனராக தனது வெற்றியை மீண்டும் பெறத்துடிக்கும் பொன்ராமிற்கும் இந்த படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளது.

யானை பாகனாக சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படம் இந்த செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement