தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவையே வியக்க வைத்தவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டில் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். இந்நிலையில், பிரபல இயக்குநர் ஒருவர் நடிகை ஸ்ரீதேவியின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் ராம்கோபால் வர்மா தான் காரணம் என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

இயக்குநர் பங்கஜ் பரசர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஸ்ரீதேவி படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது நல்லவிதமாகத்தான் உடல்நிலையை பேணிக்காத்து வந்தார். ஆனால், அவரது உடல் பலவீனமடையை காரணம் அவர் கடைப்பிடித்து வந்த டயட் தான். ராம்கோபால் வர்மா படத்தில் நடிக்கும் போது இந்த பிரச்னை தொடங்கியது என தெரிவித்துள்ளார். இயக்குநர் பங்கஜ் பரசர் ஸ்ரீதேவியை வைத்து சால்பாஸ், மேரி பீவி காஜா ஜவாப் நஹிம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். சால்பாஸ் படத்தின் மூலம் தான் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 

ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா செய்த டார்ச்சர்

சால்பாஸ் திரைப்படம் தமிழில் அஞ்சு மஞ்சு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பங்கஜ் பரசர் கூறியதாவது, நான் ஸ்ரீதேவியை வைத்து மேரி பீவி காஜா ஜவாப் நஹிம் படத்தை இயக்கினேன். இப்படத்தில் அக்சய்குமார் ஹீரோவாக நடித்தார். அதே நேரத்தில் ராம் கோபால் வர்மா படத்திலும் ஸ்ரீதேவி நடித்து வந்தார். அவரது படத்திற்காக ஸ்ரீதேவியின் உடல் எடையை குறைத்து உடல் மெலியும்படி நடிக்க டார்ச்சர் செய்துள்ளார். அதற்கான டயட்டையும் கடைப்பிடிக்க ஸ்ரீதேவியிடம் ராம் கோபால் வர்மா வலியுறுத்தியுள்ளார். 

Continues below advertisement

மயங்கி விழுந்த நடிகை

அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே வேறு வேறு படங்களில் ஸ்ரீதேவி கமிட் ஆகி நடித்து வந்ததால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மேரி பீவி காஜா ஜவாப் நஹிம் படப்பிடிப்பில் ஸ்ரீதேவி உப்பு குறைத்த டயட் சாப்பாடை சாப்பிட்டதால் அவருக்கு ரத்தம் அழுத்தம் குறைந்து படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். மொத்த யூனிட்டும் ஷாக் ஆனது. அவர் மயங்கி பக்கத்தில் இருந்த சேரில் பட்டென விழுந்ததில் அவரது முகத்தில் பலத்த காயமடைந்தது. ஒரு பல்லும் உடைந்தது. உடல்நிலை மோசமானதால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஸ்ரீதேவி ஓய்வில் இருந்தார். இதனால் எனது படத்தையும் சரியாக முடிக்கவில்லை. எடுத்ததை வைத்து க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுத்தேன். பின்னர் படம் ரிலீஸ் ஆனபோது எழுத்துக்கள் மூலம் ரசிகர்களுக்கு புரிய வைக்க முயற்சித்தேன் என இயக்குநர் பங்கஜ் பரசர் தெரிவித்தார்.