இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவன் தலைவி திரைப்படம் வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி - நித்யா ஆகியோர் நடித்திருக்கின்றனர். நேற்று வெளியான இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் தற்போது அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
பக்கம் பக்கமாக பேச்சு
தலைவன் தலைவி படத்தின் எதிர்பார்ப்பை விட விஜய் சேதுபதியும் - பாண்டிராஜூம் சண்டை குறித்த செய்திகள் தான் அதிகமாக பேசப்பட்டது. இதுகுறித்த செய்திகளும் அதிகம் வெளியானது. பக்கம் பக்கமாக விஜய் சேதுபதி ஒரு பக்கமும், இயக்குநர் பாண்டிராஜ் ஒரு பக்கம் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், நீயா நானா கோபிநாத்திடம் இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி அளித்தார். அதில், விஜய் சேதுபதிக்கும் எனக்கும் நேரடியாக எந்த சண்டையும் இல்லை, தன்னை சுற்றி இருந்தவர்கள் தவறாக பேசியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ணமாட்டேன்
பசங்க படம் இயக்கிய போது விஜய் சேதுபதி அந்த கதாப்பாத்திரத்திற்கு செட் ஆகவில்லை. பிறகு அவர் அனுப்பிய நடிகர் தான் விமல். அவர் மட்டும் இல்லை, அட்டகத்தி தினேஷையும் அவர் தான் அனுப்பி வைத்தார். ஆனால், ஒரு போதும் விஜய் சேதுபதியிடம் நேரடியாக சண்டை போட்டது இல்லை. என் வாழ்க்கையில் விஜய் சேதுபதியை வைத்து படமே பண்ணக்கூடாதுன்னு இருந்தேன். என்னிடம் அவரை பிடிக்காத 10 பேர் இருப்பார்கள். அவரிடம் என்னை பிடிக்காதவர்கள் இருப்பார்கள். இவர்கள் சொல்வதை நம்பும்போது வெறுப்புதான் வரும். அவரை பத்தி என்னிடமும் என்னை பத்தி அவரிடமும் தவறாக சொன்னால் எப்படி பேசுவோம். ஆனால், இருவரும் பேச தொடங்கிய பிறகுதான் உண்மை தெரிய வருகிறது என பாண்டிராஜ் தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உடைத்த ரகசியம்
அதாவது சார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒருவரை பத்தி பேசியது வைரலானது. ரொம்ப நாட்களா 15 வருஷமா எனக்கும் ஒரு நண்பருக்கும் முரண் ஏற்பட்டது. அவருக்கு என்னை பிடிக்காது. என்னை அவருக்கு பிடிக்காது. ஆனால், அவரை சமீபத்தில் தான் சந்தித்தேன். அவரை மாதிரி சிறந்த நண்பரை பார்க்கவே முடியாது. ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் விஜய் சேதுபதி சொன்னாருல அது வேற யாரும் இல்லை நான்தான் என இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்தார். இதை கேட்டதும் கோபிநாத் மனம் விட்டு சிரித்தார். பின்பு எல்லோரும் இயக்குநர் மிஷ்கின் சார் என்று சொன்னாங்க. அப்புறம் விஜய் சேதுபதியே எனக்கு போன் பண்ணி அய்யா உங்களை பத்தி பேசியிருக்கேன் பாத்தீங்களா என்று கேட்டதாக பாண்டிராஜ் கூறியுள்ளார்.
அவர் ஒரு விஜயகாந்த்
பிறகு பேசிய இயக்குநர் பாண்டிராஜ், மிஷ்கின் சார் பிறந்தநாளில் படம் பண்ணுவதாக தெரிவித்தோம். அப்படித்தான் தலைவன் தலைவி உருவானது. நாங்க இருவரும் படப்பிடிப்பில் அய்யா அய்யா என்று தான் பேசிக்கொள்வோம். அப்போது விஜய் சேதுபதி ஒரு விஜயகாந்த் சார். உண்மையில் நான் பார்த்த வரை விஜயகாந்த் என்று எமோஷனலாக தெரிவித்தார். அப்போது கோபிநாத் இது பெரிய வார்த்தைங்க என்றார்.