Pa.Ranjith Speech: ‘கபாலி படத்தால் மனஉளைச்சல்...’ மேடையில் உண்மையை போட்டுடைத்த இயக்குநர் பா.ரஞ்சித்!

 ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது (23-08-2022). இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன், பா.ரஞ்சித், காளிதாஸ், வெங்கட்பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். 

Continues below advertisement

 ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது (23-08-2022). இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன், பா.ரஞ்சித், காளிதாஸ், வெங்கட்பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். 

Continues below advertisement

நிகழ்ச்சியில் ரஞ்சித் பேசியதாவது, “ 'ஜெய்பீம்' இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. அட்டகத்தியில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது. நான் யாரையும் வளர்த்து விட வில்லை. அவர்கள் திறமையானவர்கள் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான். அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. வெங்கட் பிரபு சாரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன்.

 ‘சென்னை 28’ படம் தான் என் வாழ்வை செதுக்கியது. நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக்கொடுத்தது. சசி சார், நான் உதவியாளனாக இருந்த போது என்னை கூப்பிட்டு உட்காரவைத்து பேசினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவரை நான் மறக்க மாட்டேன். என் உதவியாளர்களிடம் நான் நன்றாக நடந்துகொள்ள அதுதான் காரணம். வெற்றிமாறன் ஒரு படத்தை எந்த ஒரு காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கலாம் என்பதை நிரூபித்தவர். இந்த மூன்று பேரும் இங்கிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.


அடுத்ததாக என் வாழ்வில் இரண்டு தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒன்று கலைப்புலி தாணு சார், ஞானவேல் சார். கலைப்புலி சாரிடம்  ‘கபாலி’ செய்த போது அவர் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை எனக்காக ஒத்துக்கொண்டார். படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் பெரிதாக பேசவில்லை. மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் அவர் தான் கூப்பிட்டு படத்தின் கலெக்சன் காட்டி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். ஞானவேல் சார் அட்டகத்தி ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இன்று இங்கிருந்திருக்க மாட்டேன். இவர்கள் எல்லாம் இங்கிருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். 

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..

'அட்டகத்தி' பார்த்தபோது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக தெரிந்தது. அதே போல் தான் இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போதும் இருந்தது. உறவுகள் பற்றி நாம் பேச தயங்குகிற விசயத்தை, தமிழ் சினிமாவில் நிகழ்த்தும் படமாக இது இருக்கும். ரஞ்சித் மீண்டும் புது டிரெண்டை உருவாக்கியிருக்கிறார். வாழ்த்துக்கள்.


தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித்.  ‘சார்பட்டா’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், பா.ரஞ்சித் அட்டகத்தி பாணியில் அழகிய காதல் கதையை இயக்குவதாக அறிவித்தார்.

 

இதன்படி, நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற காதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரைலர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 31 தேதி வெளியாக உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola