தமிழ் சினிமாவின் இடதுசாரி அரசியலை தொடர்ச்சியாக தனது படங்களின் வழியாக பேசி வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். அதேபோல் தலித்திய அரசியலை பேசிவருகிறார் பா ரஞ்சித். இருவரது படங்களின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் ரசிகர்கள் இரு இயக்குநர்களையும் கொண்டாடியே வந்துள்ளார்கள். ஆனால் ஆண்மைகால  நிகழ்வுகளால் ரசிகர்கள் இருவர் மீதும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். ஒரே நேரத்தில் சமூக வலைதளத்தில் இருவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

Continues below advertisement

துரந்தரை விமர்சித்த வெற்றிமாறன் 

அண்மையில் நீளிரா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்வில் இந்தியில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் துரந்தர் படம் குறித்து அவர் மறைமுகமாக பேசியதே அவர் மீதான இந்த கடும் விமர்சனத்திற்கு காரணம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்திய டிமானிடைசேஷன் பல்வேறு அப்பாவி மக்களின் உயிரை பறித்தது. ஆனால் அதனை நியாயப்படுத்தும் விதமாக படங்கள் பிரச்சாரங்கள் செய்கின்றன. பிரச்சார திரைப்படங்கள் மக்களிடம் பெரியளவில் தாக்கம் செலுத்தக்கூடியவை என வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்த கருத்தை தெரிவித்தத்தில் இருந்து வலதுசாரிகள் வெற்றிமாறன் மீதும் அவரது படங்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். துரந்தர் பிரச்சார படம் என்றால் நக்ஸலைட்டுகளுக்கு ஆதரவாக பேசிய அவரது விடுதலை படமும் பிரச்சார படம் தான பலர் பதிவிட்டு வருகிறார்கள்

என்.டி.ஏ வேட்பாளருக்கு பா ரஞ்சித் ஆதரவு 

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. இப்படியான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வைத்துள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு ரஞ்சித் தனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 2024 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான கி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். அவரது கொலையைத் தொடர்ந்து அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் அவரது மனைவி திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார்.

Continues below advertisement

சனாதன எதிர்ப்பை தொடர்ச்சியாக பேசி வரும் ரஞ்சித் தற்போது பாஜக கூட்டணி வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்திருப்பது கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.