தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் பி.வாசு. தற்போது இவர் திரைப்படங்கள் இயக்குவதில்லை. நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட பி.வாசு ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என பல நடிகர்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் ஒரே நாளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இரண்டு படங்கள் குறித்து கீழே காணலாம்.

Continues below advertisement

ஒரே நாளில் ரிலீசான ஒரே இயக்குனரின் 2 படங்கள்:

தமிழ் சினிமாவிற்கு பொங்கல் பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். 1992ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிய திரைப்படங்கள் மன்னன் மற்றும் ரிக்ஷா மாமா. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.  அதேபோல, சத்யராஜ் நடிப்பில் வெளியாகிய ரிக்ஷா மாமா படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மன்னன் படம் 1992ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி வெளியாகியது. ரிக்ஷா மாமா படம் 1992ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வெளியாகியது. இந்த இரண்டு படங்களையும் இயக்குனர் பி.வாசுவே இயக்கியிருந்தார். பி.வாசு தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த தருணம் அது. இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதால் பி.வாசுவின் மார்க்கெட் இன்னும் அப்போது கோலிவுட்டில் எகிறியது.

Continues below advertisement

மன்னன் - ரிக்ஷா மாமா:

மன்னன் படத்தை ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஏற்ப முழுக்க முழுக்க ஆக்ஷன் விருந்தாகவும், குடும்ப படமாகவும் இயக்கியிருந்தார். ரிக்ஷா மாமா படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக இயக்கியிருந்தார். மன்னன் படத்தில் ரஜினிகாந்துடன், விஜயசாந்தி, குஷ்பு, மனோரமா, விசு, கவுண்டமணி, பண்டரி பாய், விகே ராமசாமி என பிரபலங்கள் நடித்தனர்.

சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா படத்தில் கெளதமி, குஷ்பு, பேபி ஸ்ரீதேவி, கவுண்டமணி, விஜயகுமார், நாகேஷ், ராதாரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களுக்குமே இளையராஜாவே இசையமைத்திருந்தார். மன்னன் படத்திற்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரிக்ஷா மாமா படத்திற்கு எம்சி சேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். 

வெற்றிப் படங்கள்:

பி.வாசு - சந்தானபாரதி இணைந்து இயக்கிய பன்னீர் புஷ்பங்கள், பி.வாசு தனியாக இயக்கிய பொன்மனச் செல்வன், பணக்காரன், நடிகன், சின்ன தம்பி, மன்னன், ரிக்ஷா மாமா, வால்டர் வெற்றிவேல், சேதுபதி ஐபிஎஸ் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள். அவர் ரஜினியை வைத்து இயக்கிய சந்திரமுகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஆகும். கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு சந்திரமுகி 2 படத்தை இயக்கியிருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கிலும் படம் இயக்கியுள்ளார்.

3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்