தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கால்ஷீட் கொடுத்தால் அவரை வைத்து படம் இயக்க நான் தயாராக உள்ளேன் என இயக்குநர் மோகன் ஜி கூறியுள்ளார்.

Continues below advertisement

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக “திரௌபதி 2” படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, நட்டி, ரக்‌ஷனா இந்துசூடன் என பலரும் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 23ம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, “நான் ரிச்சர்ட் ரிஷி, நட்டி போன்றோரை வைத்து தான் திரௌபதி 2 படத்தை இயக்கியுள்ளேன். இந்த பிரிவில் உள்ள படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவது ஒரு கொடுப்பினை வேண்டும் என சொல்லலாம். ஆனால் துரதிஷ்டவசமாக ஜனவரி 23ம் தேதி நேதாஜி பிறந்தநாளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படும்போது அந்த ஸ்லாட்டை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனமாகும். அப்படித்தான் திரௌபதி 2 பொங்கல் ரிலீஸாக வெளியிட முடிவு செய்யப்பட்டது.

Continues below advertisement

எனக்கு ஜனநாயகன் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத்தை ரொம்ப பிடிக்கும். அப்படத்தின் ட்ரெய்லர் வந்தபோது கூட அதனைப் பார்த்து சிறந்த கமர்ஷியல் ட்ரெய்லர் என பதிவு வெளியிட்டிருந்தேன். நானும் ஆவலுடன் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தைக் காண காத்திருந்தேன். அதற்காக டிக்கெட் எல்லாம் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் அந்த படம் சென்சார் பிரச்னையில் சிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்தார். 

தொடர்ந்து மோகன் ஜியிடம், “ஜனநாயகன்” படம் விஜய் அரசியலை பேசுகிறது, “பராசக்தி” படம் திமுகவுக்கான அரசியலை கொண்ட நிலையில்,  “திரௌபதி 2” படம் பாஜகவுக்கானதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அப்படி யாராவது இருந்தால் என்னிடம் கூட்டி வாருங்கள். திரௌபதி 2 படத்துக்கு ப்ரோமோஷனாக அமையும். நானும் யாரை எல்லாம் அணுகி பார்க்கிறேன். ஹெச்.ராஜா எனக்கு திரௌபதி  படத்தில் இருந்தே சப்போர்ட் செய்து வருகிறார். அவருக்கும், ராமதாஸ் போன்றவர்களுக்கு சினிமா ரொம்ப தூரம். எனினும் சமீபத்தில் ஹெச்.ராஜா ஒரு படத்தின் நடித்துள்ளார். 

எனக்கு பாஜகவில் அண்ணாமலையை தவிர வேறு யாரும் தொடர்பில் இல்லை. அவரிடம் சினிமா பற்றி பேச முடியாது. வேறு எதாவது சந்தேகம் என்றால் கேட்கலாம். நீங்கள் அண்ணாமலையிடம் பேசி ஒரு கால்ஷீட் வாங்கி தாருங்கள். நான் அவரை வைத்து தமிழில் படம் பண்ணுகிறேன்" என தெரிவித்துள்ளார்.