இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில்  உரவாகி வரும் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்தது தமிழ் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தில் பா.ரஞ்சித் மீதும் வழக்குப்பதிவு செய்து பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா கடந்த பத்து வருடங்களாக உதவி செய்து வருவதாக சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசி ஸ்டண்ட் சில்வா, "கடந்த பத்து வருடங்களாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை செலுத்தி வருகிறார். அவர் ஏற்கனவே அகரம் ஃபவுண்டேஷனை வைத்து உதவி செய்கிறார். அதே நேரத்தில் ரூ.10 லட்சம் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் அவர் இதுகுறித்து வெளிப்படையாக சொன்னதில்லை" என தெரிவித்தார். இதுதொடர்பான செய்திகளும், வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலானது. 

சூர்யாவின் செயலை அறிந்து பலரும் பாராட்டினார்கள். திரையுலக பிரபலங்களும் சூர்யாவை புகழ்ந்து பேசினர். இந்நிலையில், திரெளபதி, ருத்ர தாண்டவம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை எடுத்த இயக்குநர் மோகன் ஜி சூர்யா குறித்த வீடியோ ஒன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவி செய்யவில்லை என்பது போன்ற செய்தி வெளியாகியுள்ளது.

 டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில், சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தொடர்ந்து இன்சூரன்ஸ் பணம் கொடுக்கிறார் என்ற செய்தி உண்மையானது. இல்லை. ஆரம்பகாலத்தில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கொடுத்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என்று சொல்லலாம். தற்போது அந்த 2 லட்சம் ரூபாயை கொடுப்பதாக தெரியவில்லை என சித்ரா லட்சுமணன் பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இயக்குநர் மோகன் ஜி இதனை பகிர்ந்து சூர்யா ரசிகர்கள் ஸ்டார்ட் மியூசிக் என பதிவிட்டுள்ளார். வலதுசாரி சிந்தனை கொண்ட மோகன் ஜி சூர்யாவை தற்போது விமர்சித்திருப்பது சர்ச்சையாகி மாறியுள்ளது.