ஸ்டண்ட் கலைஞர்களுக்கு நடிகர் சூர்யா கடந்த 10 ஆண்டுகளால இழப்பீடு தொகை செலுத்தி வருவதாக ஸ்டண்ட் சில்வா கூறொயிருந்த நிலையில் சூர்யா அப்படி எல்லாம் எந்த உதவியும் செய்யவில்லை என இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பற்றிவிட்டது சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவை விமர்சித்த மோகன் ஜி

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வந்த வேட்டுவம் படத்தின் படப்பின்போது சண்டை பயிற்சியாளர் எஸ் மோகன்ராஜ் உயிரிழந்தது திரைத்துறையில்  பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருத்தத்திற்குரிய நிகழ்வு நடந்ததைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் திரைத்துறையைச் சேர்ந்த 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தனிப்பட்ட காப்பீடு திட்டத்தை ஏற்பாடு செய்தார். அவரது செயல்பாடு பரவலாக பாராட்டுக்களைப் பெற்றது. மேலும் இதை முன்னுதாரணமாக காட்டி தமிழ் நடிகர்களும் இதை பின்பற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். 

இப்படியான நிலையில் சண்டை பறிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா சூர்யா பற்றிய தகவல் ஒன்றை யூடியும் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசியிருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக சூர்யா சண்டை பயிற்சியாளர்களுக்கு காப்பீடு பணமாக 10 லட்சத்தை கட்டி வருவதாகவ அவர் கூறியிருந்தார். இந்த கருத்தை மறுத்து மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

இந்தியாவை விட்டு துரத்துவோம்

"  சூர்யா பண உதவி செய்தது பற்றி அதைப் பத்தி எந்த தகவலும் இல்லை.. ஸ்டண்ட் பண்ணுறதுக்கு முன்னாடி ஒவ்வொரு ஃபைட்டருக்கும் 300 ரூபாய் கொடுக்கிறோம்.. அதுதான் அவர்களுக்கு ஏற்படு  காயங்களுக்கான மருத்துவ இழப்பீட.. அதைத் தவிர வேற எந்த இன்சூரன்ஸ் பாலிசியோ அல்லது ஸ்கீமோ ஸ்டண்ட் யூனியனில் இதுவரைக்கும் இல்ல.. எஸ்ஆர்எம் மட்டும்தான் பாலிசி எடுக்க முயற்சி பண்ணுச்சு, அப்புறம் அவங்களும் மறுத்துட்டாங்க." என மோகன் ஜி பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து மோகன் ஜிக்கு சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் காரசாரமான வாதம் நடந்து வருகிறது.

மற்றொரு ரசிகரிடம் " சூர்யா செய்ததாக கூறப்படும் இந்த  நீங்களா விருப்பப்பட்டு ஸ்டண்ட் செய்து உயிரை மாய்ததால் நாங்கள் பணம் தர மாட்டோம் என எந்த நிறுவனமும் பாலிஸி தர தயராக இல்லை.. அப்படி இருக்கும் போது இவர் யாருக்கு எந்த கம்பெனி பாலிஸி கட்டினார். அப்படி கட்டினால் உயிர் இழந்தவர்கள் பெற்ற காப்பீடு தொகை எங்கே? என்னுடைய தற்போதைய படத்திற்கு போன வாரம் வரை 4 சண்டைக்காட்சிகளை நான் செய்தேன்.. நாங்கள் ஆபத்தான ஷாட்களை எடுத்தாலும் எந்த திட்டங்களும் கிடைக்கவில்லை.. உங்களுக்குப் பிடித்த நடிகருக்காக இங்கே கத்தாதீர்கள்.." என மோகன் ஜி கூறினார். 

சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் மோகன் ஜி சார்ந்த சமூகத்தை பிரதிபலிக்கும் காலண்டர் பயன்படுத்தபட்டது பெரும் சர்ச்சையானது. இந்த காட்சியை சுட்டிக்காட்டி ரசிகர்கர் ஒருவரின் பதிவிற்கு மோகன் ஜி சூர்யாவை விமர்சித்து  மிக கடுமையாக பதிலளித்துள்ளார் " ஒரு காலண்டருக்கே மும்பை போக வேண்டியதாகவிட்டது. இன்னொரு முறை மாட்டினால் இந்தியாவுக்கு வெளியே தான் " என அவர் ரிப்ளை செய்துள்ளார்.