‘துரந்தர்-2’ படம் குறித்து இயக்குநர் அமீர் கருத்திற்கு திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்தவாரம் வெளியான துரந்தர்- 2 வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்திய உளவாளி பாகிஸ்தான் சென்று அங்கு நடந்த நிகழ்வுகளை காண்பிப்பதை போல கதை இருப்பதால் இந்தப்படத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகின்றன. இந்தப்படத்திற்கு ரஜினிகாந்த உள்ளிட்டோர் ஆதரவு கொடுத்த நிலையில், இயக்குநர் அமீர், வெற்றிமாறம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், அமீர் கருத்திற்கு திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமீர் கருத்துக்கு மோகன் ஜி கடும் கண்டனம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ ராம நவமி ஆன்மீகப் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன் ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், துரந்தர் படம் குறித்து இயக்குநர் அமீர் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

Continues below advertisement

அப்போது பேசிய அவர், பாகிஸ்தானிலிருந்து உளவு பார்க்க வருபவர்களை ஆதரிக்கும் வகையில் கருத்துகள் கூறப்படுகின்றன. நாட்டில் நடந்த தாக்குதல்களுக்கு வரலாறு உள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை.அப்படியிருக்கும்போது தேசப்பற்று குறித்து கேள்வி எழுப்புவது ஏன் என்றார். அமீர் கருத்துக்கு வன்மையான கண்டனத்தையும் மோகன் ஜி தெரிவித்தார்மேலும், நிகழ்ச்சி முடிந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.