இன்று இயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் திரையுலக பிரபலங்கள் அவரைப் பற்றி நினைவைப் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தனது தந்தையின் சமாதிக்குச் சென்று அவரை நினைவுகூர்ந்துள்ளார் மகேந்திரனின் மகனான இயக்குநர் ஜான் மகேந்திரன்.


மகேந்திரன் என்னும் படைப்பாளர்


1978ஆம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலம் தான் திரையுலகில் இயக்குநராக மகேந்திரன் அறிமுகமாகிறார். அந்தக் காலக்கட்டத்தில் பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்ற ஆளுமைகளுக்குள் மத்தியில் தன்னையும் தனி அடையாளமாக அவர் மாற்றினார்.


உமா சந்திரன் எழுதிய ‘முள்ளும் மலரும்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு முள்ளும் மலரும் படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து உதிரிப்பூக்கள், ஜானி போன்ற திரைப்படங்களின் மூலமாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறினார் மகேந்திரன். மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் திரைப்படம் இன்று வரை ஒரு கிளாசிக் படமாக திரைப்பட ஆர்வலராக கருதப்படுகிறது.


ரஜினிக்கு அடையாளம் கொடுத்த மகேந்திரன்


இந்தப் படம் ரஜினிகாந்தின் சினிமா கேரியரில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். இந்த[ படம் பார்த்துவிட்டு ரஜினியை திரையுலகில் அறிமுகம் செய்த இயக்குநர் பாலசந்தர் “உன்னை சினிமாவுக்கு அறிமுகம் செய்ததில் பெருமைப்படுகிறேன்” என வியந்து பாராட்டினார். மேலும் ரஜினியே பல இடங்களில் தனக்குள் இருந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தவர் மகேந்திரன் தான் எனப் புகழ்வார். உண்மையில் தமிழ் சினிமாவில் இயக்குநராக நினைப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என சொல்லப்படுவது “முள்ளும் மலரும் படத்தை பார்த்து புரிந்து கொள்” என்பது தான்.


தந்தையை நினைவு கூர்ந்த மகன்






மகேந்திரனைத் தொடர்ந்து அவரது மகனான ஜான் மகேந்திரனும் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.  விஜய் ஜெனிலியா நடித்த சச்சின் படத்தை  இயக்கியுள்ளார். இன்று தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சமாதிக்குச் சென்று அவரை நினைவுகூர்ந்துள்ளார் ஜான் மகேந்திரன். தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்து தான் அவரை மிஸ் செய்வதாகப் பதிவிட்டுள்ளார்.


அப்பாவின் பிடித்த படம்


தனது தந்தை மகேந்திரனின் படங்களை மக்கள் ரசிப்பதைப்போல் வியந்து பேசுபவர் மகேந்திரன். தனது தந்தை இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ படம் தனக்கு மிகப் பிடித்த படமென்றும், ஒவ்வொரு முறையும் அந்தப் படம் தனக்கு புதிய விஷயங்களைக் கற்றுத்தருவதாகவும் கூறியிருக்கிறார் ஜான் மகேந்திரன்.