சமீபமாக நேர்காணல் ஒன்றில் வெற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். பல மாணவர், மற்றும் மாணவிகள் அவரிடம் சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டு வந்தனர்.


கேள்வி : உங்களுக்கு ரஜினி, கமல் தவிர வேறு எந்த ஹீரோ நடித்த படம் பிடிக்கும் ?


லோகேஷ் : சின்ன வயதில் ஒரு படம் பார்க்க போவதிற்கு முன் படத்தில் எத்தனை சண்டை காட்சி இருக்கும் என்று கேட்டுதான் படத்திற்கே போவேன். எனக்கு ஆக்‌ஷன் காட்சிகள் ரொம்ப பிடிக்கும். அதனால் ஆக்‌ஷன் படங்கள் அனைத்தையும் பார்ப்பேன்.


கேள்வி : நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்குவீர்களா ?


லோகேஷ் : இரும்பு கை மாயவி கதையை சூர்யா அவர்களுக்குதான் எழுதினேன். ஐந்து வருடங்களாக நானும் அவரும் பல கதைகள் பேசியுள்ளோம். இப்போ சூர்யா சேர் பேசினா கூட எப்போயா இரும்புக்கை மாயவினு கேட்டுட்டே இருப்பார். அவருக்காக எழுதிய கதையை அவரை வைத்து தான் படம் எடுக்க முடியும். படம் எப்போது எடுக்க முடியும் என்று தெரியவில்லை ஆனால் அவரை வைத்துதான் அந்த கதையை எடுப்பேன்.


கேள்வி : நெகட்டிவிட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?


லோகேஷ் : முதல் படம் எடுத்த பிறகு நல்ல வரவேற்பு வந்தது. சிலர் மாநகரம் படத்தை பிடிக்கவில்லை என்றனர். ஏன் பிடிக்கவில்லை என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வந்தது. ஒருகட்டதிற்கு பிறகு, 100 சதவீத ஆடியென்ஸையும் திருப்த்தி படுத்த முடியாது என்று அறிந்து கொண்டேன்.


கேள்வி : சினிமா மீது எப்படி ஆர்வம் வந்தது?


லோகேஷ் :  சினிமா வருவதற்கு முன் கனவு எதுவும் இல்லை. ஆனால் முதல் குறும்படத்திற்கு பெற்ற கைதட்டு அனைத்தையும் மாற்றிவிட்டது.


கேள்வி : சினிமாவிற்கு பிறகு என்ன பிடிக்கும்?


லோகேஷ் :  சினிமாவிற்கு அடுத்து கிரிக்கெட் விளையாட பிடிக்கும் ஆனால் விளையாட நேரமே இல்லை.


கேள்வி : இயக்குநர் மடோன் அஸ்வின் மண்டேலா படத்திற்கு தேசிய விருது பெற்றார். அதைப்பற்றி என்ன நினைக்குறீர்கள்?


லோகேஷ் :  மடோன் அஸ்வின் எனது நெருங்கிய நண்பன். நான் ஒரு கடைசி பெஞ்ச் 
ஸ்டூடண்ட்அவனோ முதல் பெஞ்ச் ஸ்டார் ஸ்டூடண்ட். அவன் அவார்ட் வாங்கவில்லை என்றால்தான் ஆச்சிர்யம் அடைய வேண்டும்.



கேள்வி : படத்திற்கு பாடல்கள் எவ்வளவு முக்கியமானவை ? 


லோகேஷ் :  தமிழ் கலாச்சாரம் பாடல்களுடன் ஒன்றி இணைந்தது அதனால்  வாழ்விலிருந்தும் படங்களிலிருந்தும்
பாடல்களை பிரிக்க முடியாது. கைதி போன்ற படத்தில் பாடல்களுக்கு அவசியமில்லை ஆனால் போர் கொண்ட சிங்கம் பாடல்  விக்ரம் படத்தில் தேவைப்பட்டது அதனால் அதில் பாடல் இருந்தது.



கேள்வி : நாவலை தழுவி படம் எடுப்பீங்களா ?


லோகேஷ் :  சிவனை பற்றிய தி இம்மார்ட்டஸ் ஒஃப் மெலுஹா என்ற நாவலை படித்தேன், அதில் சிவனுக்கு கொடுக்கும் இண்ட்ரோ ஹீரோக்களுக்கு கொடுக்கும் இண்ட்ரோவை விட மாஸாக இருக்கும். அந்த கதையை படமாக வேண்டும் என்றால் எடுக்கலாம்.


கேள்வி : ஏன் உங்கள் படங்களில் இரவு நேர காட்சிகள் இடம்பெற்றுள்ளது ?


லோகேஷ் :  இரவு நேரங்களில்தான் இப்படி பட்ட க்ரைம் சம்பவங்கள் நடக்கும் அதுபோக எனக்கு இரவில் இது போன்ற காட்சிகளை இரவில் ஷூட் செய்ய வசதியாக உள்ளது. எனக்கு இரவு நேரம் என்றால் பிடிக்கும். படக்கதைக்கு இரவு நேரத்தில் ஷூட் செய்தால்தான் சரியாக இருக்கும்.  ஆர்வம் குறையும் வரையில் இப்படி போகலாம் பின் பகல் நேரங்களில் ஷூட் செய்யலாம்.


கேள்வி : உங்கள் வாழ்வை புரட்டி போட்ட தருணம் எது ?


லோகேஷ் : வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னதுதான் என் வாழ்வில் ஏற்ப்பட்ட மாற்றத்திற்கு காரணம். வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வந்துவிட்டோம் என்று நினைப்பதே ஆபத்தான விஷயம். இப்போதான் 4 படங்கள் எடுத்து முடித்து இருக்கிறேன். படிச்சிட்டு கொடைக்கானல் சென்று பூந்தோட்டக்கலை செய்தேன். என் அப்பா வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னார். அங்கு துவங்கியது என் வாழ்க்கை.


கேள்வி : எந்த நடிகர்களை வைத்து படம் இயக்க ஆசை ?


லோகேஷ் :  ரஜினி, அஜித் ஆகிய நடிகர்கள் வைத்து படம் இயக்க ஆசை. ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரொம்ப பிடிக்கும். பி.சி.ஸ்ரீ ராம் ரொம்ப பிடிக்கும். இவர்களுடன் வேலை செய்ய ஆசை உள்ளது.