கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் விக்ரம் படக்குழு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களாக விக்ரம் படத்தில் நடித்த நடிகர்கள் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்பட்டு வந்தது.
அதன்படி, மலையாள நடிகர் பகத் பாசில் கதாபாத்திரம் அமர் என்றும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாபாத்திரம் சந்தானம் என்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்தநிலையில், விரைவில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்தது நாம் அறிந்ததே. அவரின் கதாபாத்திரம் என்ன என்று அறிந்துக்கொள்ள அனைவருக்கும் ஆர்வமாக இருந்தது.
தற்போது, விக்ரம் படத்தில் சூர்யா கதாபாத்திரம் குறித்து அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்த போஸ்டரில் சூர்யா, ஏதோ ஒரு வாகனத்திற்கு பின்னால் இருந்து திரும்பி பார்ப்பது போன்றும், தனது இடது பக்க காதில் கருப்பு கலர் இயர் ரிங்க்ஸ் அணித்திருப்பது போன்றும் இடம்பெற்று இருந்தது. மேலும், நடிகர் சூர்யாவின் லுக் மிகவும் மாஸ் ஆக இருந்தது.
ஆனால், கடைசிவரை சூர்யாவின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்து மட்டும் தெரியவில்லை. பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரின் கதாபாத்திரத்தை வெளியிட்ட படக்குழு நடிகர் சூர்யாவின் கதாபாத்திரத்தை மட்டும் சஸ்பென்ஸாக வைத்துள்ளது.
மேலும், வருகின்ற ஜூன் 1ஆம் தேதி துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்