தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களை லைன் அப்பில் வைத்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படம் நாளொரு வண்ணம் கூலி படம் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கூலி படத்தின் கதை லீக் ஆகியிருப்பதாகவும், இதுதான் கதையா என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
கூலி படம் மாஸ் ஹிட் ஆகுமா?
குறிப்பாக சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு தான் புரோமோஷன் தேவை என பரவலாக பேசப்படுவது உண்டு. ஸ்டார் படங்களுக்கு அது தேவையில்லை என்றும் குறிப்பிடுவார்கள். ஆனால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் ரிலீஸ் ஆக ஒரு மாதம் இருக்கும் நிலையில, கூலி படத்திற்கான புரோமோஷனை இப்போதே தொடங்கிவிட்டார். சமீபத்தில் கூலி படம் தொடர்பாக அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்திருந்தார். இதில், கூலி படத்தின் டிரைலர் தேதியையும் குறிப்பிட்டார். மேலும், கைதி 2, அமீர்கான் படம் என லோகேஷ் கனகராஜூம் லைன் அப்பில் வைத்திருக்கிறார்.
50 கோடி சம்பளம்
கூலி படத்திற்காக தான் வாங்கிய சம்பளம் குறித்தும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். லியோ திரைப்படம் 600 கோடி வசூல் செய்ததால் கூலி திரைப்படத்தில் நான் 50 கோடி சம்பளம் வாங்க முடிந்தது. லியோ படத்தை விட கூலி படத்தில் 2 மடங்கு அதிக சம்பளம் என்றும் தெரிவித்துள்ளார். அதே சமயம் டப்பிங் ஸ்டுடியோவில் படத்தை பார்த்த ரஜினி சாருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. டப்பிங் பேசி முடித்துவிட்டு என்னை கட்டியணைத்து எனக்கு இன்னொரு தளபதியை கொடுத்திருக்கிறீர்கள் என்று ரஜினி கூறியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் ரசிகர்களுக்கு கூலி படத்தின் மீது அதிக நம்பிக்கை வந்திருக்கிறதாம்.
கூலி படத்தின் கதை இதுதானா?
ரஜினி - லோகேஷ் காம்போ ஒரு பக்கம் அனிருத் இசை, மோனிகா பாடல் மல்டிஸ்டார்கள் நிறைந்திருக்கும் படமாக கூலி இருக்கிறது. பான் இந்திய அளவில் வெளியாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்நிலையில், படத்தின் கதை குறித்து பரவலாக பேசப்படுவதால் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கின்றனர். அதாவது, கூலி படத்தில் பெரிய கேங்ஸ்டராக இருக்கும் ரஜினிகாந்த் அவர் செய்த தவறுகளை சரி செய்ய முயற்சிக்கிறாராம். அதற்காக தனது எதிரிகளை பழிவாங்கிவிட்டு பிறகு புதிய வாழ்க்கையை தொடங்குவதாக பேசப்படுகிறது. கதை அதர பழசாக இருக்கிறது. இதற்குத்தான் 600 கோடி பட்ஜெட் படமா என்றும் கலாய்க்க தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.
மேக்கிங்கில் மிரட்டுவாரா லோகேஷ்?
கதையே இல்லாதது போல வழக்கமான கேங்ஸ்டர் கதை. ரஜினிக்கு ஏற்ற பின்னணி இசை இதை வைத்து தான் ஆயிரம் கோடி அடிக்கும் என கூறுகிறார்களோ என்றும் லோகேஷ் கனகராஜ் மேக்கிங்கில் மிரட்டி விடுவார். கமலுக்கு விக்ரம் போன்று ரஜினிக்கு கூலி இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். படத்திற்கான ஹைப் ஒரு பக்கம் இருந்தாலும், சிலர் கதை லீக் ஆனதை வைத்து ரோஸ்ட் செய்ய தொடங்கிவிட்டனர். இயக்குநர் லோகேஷ் எப்போது கேங்ஸ்டர், போதை கடத்தல், தங்கம் கடத்தலை விட்டு நல்ல கதைக்கு வருவார் என்று தெரியவில்லை என கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர். கூலி படத்தையும் பங்கமாய் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.