இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடைசியாக சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து தனது படத்திற்கான பணிகளை அவர் தொடங்கியுள்ளார். எந்த முன்னணி நடிகர்களும் இல்லாமல் சிறிய பட்ஜெட்டில் திரைப்பட விழாக்களுக்கு ஏற்ற வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய படத்தை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ்
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் வழியாக கவனமீர்த்து பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கார்த்திக் சுப்பராஜ். ஜிகர்தண்டா , இறைவி , பேட்ட , மஹான் , ஜகமே தந்திரம் , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் , அண்மையில் ரெட்ரோ என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொடர் கமர்சியல் படங்களை இயக்கிவந்த கார்த்திக் சுப்பராஜ் தற்போது ஒரு புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளார். எந்த பெரிய முன்னணி நடிகரும் இல்லாமல் தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். சிக்யா என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனம் இதற்கு முன் மசான் , லஞ்சு பாக்ஸ் , கில் , சூரரைப் போற்று ஆகிய படங்களை தயாரித்துள்ளது. திரைப்படம் விழாக்களில் இப்படத்தை திரையிடுவதற்கு கார்த்தி சுப்பராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . வரும் நவம்பர் 14 ஆம் தேதி முதல் மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.