சட்டசபையில் அதிமுக சார்பாக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுப்பதில் அதிமுக இரு குழுக்களாக பிரிந்துள்ளது . 22 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு கடிதத்துடன் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற குழு உறுப்பினராக தன்னை நியமிக்க கோரியுள்ள நிலையில் 25 எம்.எல்.ஏ க்கள் சிவி சண்முகத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து அவரை சட்டமன்ற குழுத் தலைவராக்க கோரியுள்ளார்கள் . இன்னொருபக்கம் எஸ்.பி வேலுமணி அவர்களின் தலைமையில் மற்றொரு குழு நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக கட்சியில் இப்படி குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில் திரைப்பட இயக்குநர் சேரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இயக்குநர் சேரம் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதராவாக பேசி வந்தார். தேர்தலில் விஜய் வெற்றிபெற்றதும் விஜயை பாராட்டியும் பதிவிட்டிருந்தார். தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சேரன் பதிவிட்டுள்ளார்.
தனித்து விட்டாலும் கலங்கிவிடமாட்டார்
நேற்று எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளன்று சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறித்து பதிவிட்டார் " மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என வல்லுநர்கள் ஆரூடம் சொன்னபோது 4 வருடம் ஆட்சி கவிழாமல் காப்பாற்றி அதிமுக மானம் காத்த செயல் வீரர்.. கடந்த தேர்தலில் இவர் மட்டுமே ஒவ்வொரு தொகுதிகளாக சென்று பரப்புரை செய்து மக்களை சந்தித்தார்.. கூடவே இருந்த கட்சியினர் இவரை தனித்து விட்டாலும் கலங்கிவிடமாட்டார்.. அது அவருக்கு புதிதுமல்ல... எல்லோரையும் பார்க்கும் இன்றைய முதலமைச்சர் கரூர் சம்பவத்தின் போது முதல் முதல் அவர் பக்கம் நின்ற எடப்பாடியாரை சென்று பார்க்காமல் நிராகரித்தது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.. ஆனால் இவையெல்லாம் கடந்தும் அவர் நிற்பார்... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா... என்றும் உங்கள் நிலை குன்றாமல் வாழ வாழ்த்துக்கள்..." என்று சேரன் தனது பதிவில் கூறியுள்ளார்"
717 மதுக்கடைகளை மூடியது குறித்து
முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தமிழகத்தில் பள்ளி , கோவில்கள் மற்றும் கல்லூரிகளின் அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தவிட்டார். இது குறித்து சேரன் "தம்பி .. என்னோட கேள்வி... ஒவ்வொருவரும் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கும் மூடுவதாக சொன்னார்கள்... ஆனல் அடுத்தடுத்த ஆட்சிகள் அதையே சொல்கிறார்கள்.. அப்படியானால் யாருமே மூடவில்லையா... இல்லை குத்தகைக்கு எடுத்த எல்லா கடைகளுக்கும் பள்ளிக்கும் கோவில்களுக்கும் அருகில் தான் இருக்கிறதா?" என தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
