தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக உலா வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, சரத்குமார் என அனைத்து முன்னணி கதாநாயகர்களையும் இயக்கிய இயக்குனர். 

Continues below advertisement

போயா - போ என்று கூறிய பாரதிராஜா:

இவர் ஒரு முறை பாரதிராஜா தன்னிடம் கடிந்து கொண்டதை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரை திறந்தால் பெரிய ஹால் இருக்கும். ஏராளமான நாற்காலிகள் இருக்கும். அந்த நாற்காலிகள் எல்லாம் படுத்துக்கலாம். அமீர்கான் தூங்கிக் கொண்டு இருப்பார். இந்த பக்கம் இந்தி எழுத்தாளர் ஜாவித் அக்தர், இந்த பக்கம் இன்னும் 2, 3 தயாரிப்பாளர்கள் இருப்பார்கள். இந்த பக்கம் பாரதிராஜா சார் இருப்பார்கள். 

Continues below advertisement

நானும் அவர்களுடன் உட்கார்ந்து பேசிட்டு இருப்பேன். அப்போது, கதவைத் திறந்து ஏ.ஆர்.ரஹ்மான் உதவியாளர் ரவிக்குமார் சார் உங்களை கூப்பிட்றாங்க சார் என்பார். அப்போது பாரதிராஜா சார் , போயா போ.. இவ்ளோ பேர் அவன் கண்ணுக்குத் தெரியல. நீதான் தெரியுற. போ என்று கூறுவார். 

இவ்வாறு அவர் பேசினார். 

ஏ.ஆர்.ரஹ்மான் - கே.எஸ்.ரவிக்குமார்

ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் திரையுலகின் முதன்மையான இசையைமப்பாளர் ஆவார். ரோஜா படம் மூலமாக அறிமுகமான இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் இசையமைத்துள்ளார். ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பல முன்னணி இயக்குனர்களின் முதன்மைத் தேர்வாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானே உள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் தான் முதன்முறையாக ரஜினியை வைத்து இயக்கிய முத்து படத்திற்காகத்தான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து பணியாற்றினார். அதன்பிறகு படையப்பா, தெனாலி, வரலாறு, லிங்கா ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ஏ.ஆர்.ரஹ்மான் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான படங்களில் லிங்கா தவிர மற்ற அனைத்து படங்களும் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படங்கள் ஆகும்.

கே.எஸ்.ரவிக்குமார் கடந்த 1990ம் ஆண்டு புரியாத புதிர் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்பு, தொடர் படங்களை இயக்கிய வந்த அவருக்கு நாட்டாமை மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பின்னர், முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக,  படையப்பா, தெனாலி, வில்லன், வரலாறு, தசாவாதாரம் என மிகப்பெரிய வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு தெலுங்கில் பாலைய்யாவை வைத்து ரூலர் படத்தை இயக்கிய பிறகு படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கிவிட்டார். தற்போது நடிப்பில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருகிறார். பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, அந்திமந்தாரை, தாஜ்மஹால், கண்களால் கைது செய் ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். ஏ.ஆர்.ரஹ்மான் கிராமிய படங்களுக்கும் இசையமைக்க முடியும் என்பதை பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா படங்களில் நிரூபித்திருப்பார்.