படம் நடிப்பதாக நடிகர் கார்த்திக் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக அண்மையில் இயக்குநர் பாரதி கண்ணன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த தகவல் பரவலாக பேசுபொருளாகவே தற்போது கார்த்திக் ஆதரவாளர்களிடம் இருந்து தனக்கு மிரட்டல் வந்துள்ளதாக பாரதி கண்ணன் தெரிவித்துள்ளார். திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் பிரபு மற்றும் ராதாரவி ஆகியோரும் கார்த்திக் பற்றி இனி பேசக்கூடாது என கூறியதாக அவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

Continues below advertisement

கார்த்திக் பற்றி பேசியதால் சர்ச்சை

அண்மையில் சித்ரா லட்சுமணனின் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதி கண்ணன் கலந்துகொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசினார். அப்போது நடிகர் கார்த்திக் படத்தில் நடிப்பதாக கூறி தன்னிடம் 10 லட்சம் வரை பணம் வாங்கிவிட்டு திருப்பி தர மறுத்ததாக அவர் கூறியிருந்தார். பணம் வாங்கி கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பது , படப்பிடிப்பிற்கு லேட்டாக வருவது என உச்சத்தில் இருந்த கார்த்திக்கின் சினிமா கரியர் சரிந்தது குறித்து அவர் விளக்கமாக பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் போலவே நடித்து காட்டி அவர் பேசியது ரசிகர்கள் பலரை கவர்ந்தது. இந்த காணோளி பரவலாக வைரலாக கார்த்திக் இப்படி செய்தாரா என பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

பாரதி கண்ணனுக்கு மிரட்டல்

கார்த்திக் பற்றி பேசியதால் இயக்குநர் பாரதி கண்ணன் தற்போது பல்வேறு தரப்பிடம் இருந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அண்மையில் அளித்த பேட்டியில் கார்த்திக் ஆதரவாளர்கள் தனக்கு ஃபோன் செய்து இனிமேல் அவரைப் பற்றி பேச வேண்டாம் என தன்மையாக தன்னை மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் பிரபு மற்றும் ராதாரவி ஆகியோரும் இனிமேல் கார்த்திக் பற்றி பேசக்கூடாது என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். கார்த்திக்கிடம் தான் பணம் இழந்தது பற்றி தனக்கு 10 வருடம் முன்பு வருத்தம் இருந்தது ஆனால் தற்போது இல்லை. அவரை குற்றம் சொல்ல வேண்டும் என்பது தனது நோக்கம் இல்லை. ஒரு விளையாட்டிற்காக தான் அவரைப் போலவே நடித்து காட்டியதாக பாரதி கண்ணன் கூறியுள்ளார். 

Continues below advertisement

கார்த்திக் பற்றிய சாய் வித் சித்ராவின் அந்த காணொளியும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது