பாலா
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா பிதாமகன் , நந்தா , நான் கடவுள் , பரதேசி , அவன் இவன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கியவர். பாலா திரையுலகத்திற்குள் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் கடந்துள்ளன. தற்போது அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கியுள்ள படம் வணங்கான். ரோஷினி நாயகியாக நடிக்க , மிஸ்கின் , சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியது ஏன் ?
வணங்கான் படத்தில் முன்னதாக நடிகர் சூர்யா நடிக்க இருந்தது. இதற்கான படப்பிடிப்பு தொடங்கி பின் இப்படத்தில் இருந்து சூர்யா விலகி கொண்டார். சூர்யா மற்றும் பாலா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் இப்படத்தில் இருந்து அவர் விலகியதாக தகவல்கள் வெளியாகின. வணங்கான் படத்தில் இருந்து சூர்யா ஏன் வெளியேறினார் என்கிற காரணத்தை முதல்முறையாக இயக்குநர் பாலா வெளிப்படையாக பேசியுள்ளார்
" வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகவில்லை . நாங்கள் இருவரும் பேசி இந்த முடிவை எடுத்தோம். லை லொக்கேஷன் என்பதால் சூர்யா மாதிரியான ஒரு பெரிய நடிகரை வைத்து கூட்டத்தை மேனேஜ் செய்ய முடியவில்லை. அதனால் சேர்ந்து வேற ஒரு படம் பண்ணிக்கலாம் என்றுதான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். அருண் விஜய் இந்த படத்திற்குள் வந்தபோதும் கதையில் எந்த மாற்றமும் பெரிதாக செய்யவில்லை" என பாலா தெரிவித்துள்ளார்