கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ராம். இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள பறந்து போ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தந்தை மகனுக்கும் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் படமாக இது இருக்கிறது.இதுவரை வந்த படங்களை காட்டிலும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர். 

பறந்து போ வசூல் நிலவரம்

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் 2 நாளில் பாக்ஸ் ஆபிசிலும் நல்ல நம்பரை தொட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ரூ.2 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பறந்து போ படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து திரையரங்குகளில் ஸ்கீரினும் அதிகரித்திருப்பதாக இயக்குநர் ராம் தெரிவித்தார். மேலும், குட்டீஸ் விரும்பும் படமாகவும் இது இருக்கிறது. 

பிரபலங்கள் பாராட்டு

பறந்து போ படத்தின் ரிலீசுக்கு முன்பு இயக்குநர் ராம் பல்வேறு யூடியூப் தளங்களில் பேட்டி அளித்தார். அதில், என் படத்திற்கு நானே வியாபாரியாக இருந்திருக்கிறேன். நான் பெரிய நடிகர்களை வைத்து படம் செய்திருந்தால் நான் தேடி விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என தெரிவித்தார். இதனை கற்றது தமிழ் படத்தில் இருந்து அனுபவித்து வருகிறேன். மேலும், இப்படம் மக்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், படத்தை பார்த்த பலரும் வியந்து பாராட்டி மகிழ்கின்றனர். குறிப்பாக ராம் படம் என்றாலே அதில் ஒரு சோகம் ஒளிந்திருக்கும். ஆனால், பறந்து போ படத்தை பார்த்து வாய் விட்டு சிரித்ததாகவும் ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். 

இயக்குநர் அட்லீ வெளியிட்ட வீடியோ

இந்நிலையில், இயக்குநர் அட்லீ பறந்து போ படத்தை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பறந்து போ திரைப்படம் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது. ஒரு அப்பாவுக்கும் மகனுக்குமான உறவை மிக அழகாக காண்பித்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பிடித்திருக்கிறது. இதில், சிவா மற்றும் அஞ்சலி கதாப்பாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக இப்படம் மக்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இயக்குநர் ராம் அண்ணாவுக்கு வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.