நடிகை தீபிகா படுகோன் அண்மையில் தான் இரண்டாவது குழந்தைக்கு தாயாக இருப்பதை அறிவித்திருந்தார். தீபிகா தற்போது அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் ராக்கா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தற்போது அவர் கர்ப்பமாகியுள்ள நிலையில் இப்படத்தின் காட்சிகளை எடுப்பதில் அட்லீ பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார்.

Continues below advertisement

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ரன்வீர் சிங் தம்பதியினருக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தாயான பிறகு தீபிகா படுகோன் தனது பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க முடிவுசெய்தார். இதனால் அவர் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார்.  நடிக்கவிருந்த இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் இருந்து விலகினார். பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஸ்பிரிட் மற்றும் கல்கி 2 ஆகிய இரு படங்களில் இருந்து அடுத்தடுத்து விலகினார். தற்போது அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் ராக்கா திரைப்படத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார். 

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சுமார் ரூ600 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது அட்லீயின் ராக்கா. சர்வதேச வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் தீபிகா படுகோன் அதிரடியான ஆக்‌ஷன் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வந்தார். இப்படியான நிலையில் தான் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தீபிகா படுகோன் தான் இரண்டாவது குழந்தைக்கு தாயாக இருப்பதை அறிவித்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் ராக்கா படக்குழுவினருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது 

Continues below advertisement

தீபிகாவுக்கு பதிலாக டூப் 

ராக்கா திரைப்படத்தில் தீபிகா நடிக்க இருந்த ஆக்‌ஷன் காட்சிகள் இனிமேல்தான் படமாக்கப்பட இருக்கின்றன. தற்போது தீபிகா கருவுற்றிருப்பதால் இந்த காட்சிகளை அவரை வைத்து எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் தீபிகாவின் காட்சிகளை அவருக்கு பதிலாக டூப் வைத்து எடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார் இயக்குநர் அட்லீ. நாயகனாக அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினருடன் கலந்தாலோசித்தப் பின் தீபிகாவின் காட்சிகளை டூப் வைத்து எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.