தி கோட்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படம்  நாளை வெளியாக இருக்கிறது. உலகளவில் 5000 திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிரவிடப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.


தற்போது தி கோட் படம் வெற்றிபெற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகிய இருவரும் சேர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். விஜய்  நடித்த தெறி , மெர்சல் , பிகில் உள்ளிட்ட மூன்று ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் அட்லீ. அதேபோல் விஜயுடன் மாஸ்டர் , லியோ என இரு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இயக்குநர்கள் தவிர்த்து தனிப்பட்ட முறையில் இருவரும் விஜயின் தீவிர ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.