ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவை நாடியும் அக்கட்சி இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனை கண்டித்து திரைப்பட இயக்குநர் தனது வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார். விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காமல் முஸ்லிம் லீக் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக நிற்கிறதா என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். 

Continues below advertisement

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் இரண்டு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சிக்கு 107 எம்.எல்..,க்கள் உள்ளனர். இப்படியான நிலையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்..,க்கள் தேவை என்ற சூழல் உள்ளது. இதனிடையே அதிக தொகுதிகளில் வென்றதால் தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதினார். தொடர்ந்து தனக்கு சட்டமன்றத்தில் ஆதரவு கொடுக்க பிற கட்சிகளின் உதவியை நாடினார். இதில் 5 எம்.எல்..,க்களை கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது

Continues below advertisement

இந்திய கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆதரவு 

ஆட்சியமைக்க மேலும் 6 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்கிற நிலையில் திமுக கூட்டணி கட்சிகளான விசிக , முஸ்லிம் லீக் மற்றும் கம்யுனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை நாடினார் விஜய். தற்போது இந்திய கம்யுனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது மக்களிடையே பெரிய ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியைப் பொறுத்தவரை மு க ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த முடிவை தாங்கள் ஏற்றுக்கொள்வோம் என அக்கட்சியின் தேசிய கே எம் காதர் மொகிதீன் தெரிவித்திருந்தார். முஸ்லிம் லீக் கட்சியின் இந்த செயலை கண்டித்து திரைப்பட இயக்குநர் அமீர் பதிவிட்டுள்ளார்

அமீர் கண்டனம் 

தவெக மற்றும் விஜயை தொடர்ச்சியாக நேரடியாக விமர்சித்து வந்தவர் இயக்குநர் அமீர். ஆனால் தேர்தலில் தவெக வெற்றிபெற்றது குறித்து அவர் 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். தற்போது முஸ்லிம் லீக் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறித்து அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேடசில் " தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் வருவதை பாஜக தடுக்கலாம். அதற்கு முஸ்லிம் லீக் துணை போகலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார் .

தவெகவுக்கு கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.