நடிகர் விஜய் கடந்த ஆண்டு சினிமாவில் இருந்து ரிடையர்மெண்ட் அறிவித்தார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படம் அவரது கடைசிப் படமாக இருக்கும். விஜய் அரசியல் களத்தில் முழுமூச்சுடன் இறங்கினாலும் அவர் நடிப்பிற்கு மீண்டும் திரும்புவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. பல இயக்குநர்கள் அவருக்காக கதையுடன் காத்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இணைந்துள்ளார்.

துப்பாக்கி 2 பற்றி முருகதாஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. பேட்டி ஒன்றில் இயக்குநர் விஜயுடன் துப்பாக்கி 2 படத்தை இயக்க திட்டமிருந்ததாக தெரிவித்துள்ளார். "7 ஆம் அறிவு படம் வெளியாகி 25 நாட்களில் துப்பாக்கி படப்பிடிப்பு துவங்கிவிட்டேன். முதல் பாதிக்கான கதையை மட்டும்தான் தயாரிப்பாளரிடமும் விஜயிடமும் சொல்லியிருந்தேன். ஹாஸ்பிடல் காட்சியை எடுத்தன்றுதா விஜய் சாரிடம் க்ளைமேக்ஸ் சொன்னேன். முதல் நாள் படப்பிடிப்பு முடிந்து ரூமுக்கு போய் அடுத்த காட்சியை எழுதுவேன். இப்படி எல்லாம் முன் தயாரிப்பே இல்லாமல் எடுத்த படம் அவ்வளவு பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியானதும் எனக்கு கொஞ்சம் கர்வம் ஏறிவிட்டது.

துப்பாக்கி படத்தின்போதே அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எனக்கு திட்டமிருந்தது. அப்படத்தின் இறுதி காட்சியில் விஜய் மறுபடியும் ராணுவத்திற்கு திரும்பி செல்கிறார் என்று க்ளைமேக்ஸ் என்று தான் க்ளைமேக்ஸில் இருக்கும். அவரது குடும்பம் இங்கே தான் இருக்கிறது. அதனால் அவர் அடுத்த விடுமுறைக்கு வந்தபோது நடப்பதை இரண்டாம் பாகத்தின் கதையாக சொல்லலாம் " என முருகதாஸ் கூறியுள்ளார்.

2026 ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் விஜய் வெற்றிபெறாவிட்டால் விஜய் நடிப்பிற்கு திரும்பி வந்துவிடுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. அவர் திரும்பி வந்தால் தி கோட் 2 ஆம் பாகம் , லியோ 2 , என இயக்குநர்கள் கதைகளோடு காத்திருக்கிறார்கள். இந்த படங்களின் வரிசையில் தற்போது துப்பாக்கி 2 ஆம் பாகம் இணைந்துள்ளது. அப்படியென்றால் துப்பாக்கி 2 ஆம் பாகத்தை முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து எடுப்பதற்கான வாய்ப்புகளும் இருந்து வருகின்றன.