பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூவின் மகனின் முதல் பிறந்தநாள் விழாவுக்கு டோலிவுட் செலிப்ரிட்டிக்கள் பலரும் வருகை தந்து விழாவை சிறப்பாக்கினர்.


கோலிவுட்டில் சர்ச்சையைக் கிளப்பிய தில் ராஜூ


வாரிசு என்ற ஒற்றைப் படத்தை  தமிழில் தயாரித்து அப்படம் பற்றிய அதிரடி ஸ்டேட்மெண்ட்களை வழங்கி தமிழில் பிரபலமானவர் தயாரிப்பாளர் தில் ராஜூ. தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிப்பில் இந்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யில் வாரிசு படம் வெளியானது. 


வாரிசு படம் அஜித்தின் துணிவு படத்துடன் நீண்ட நாள்களுக்குப் பிறகு மோதியது. இந்நிலையில், ப்ரொமோஷன் பணிகளின் போது “விஜய் தான் நம்பர் 1” என இவர் பேசியது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. அஜித் ரசிகர்கள் தொடங்கி, கோலிவுட்டின் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் வரை வம்சியின் கருத்து கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.


மேலும், டோலிவுட்டில் விஜய்யை வைத்து ஒரு படம் எடுத்துவிட்டு இந்தப் பேச்சு பேசுகிறார் எனப் பலரும் குட்டு வைத்த நிலையில், மற்றொருபுறம் ட்ரெண்டிங்கில் தில் ராஜூவும் இடம் பெற்றார்.


தனிப்பட்ட வாழ்க்கை


மேலும், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் “ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, டான்ஸ் இருக்கு” என இவர் பேசியது மீம் டெம்ப்ளேட்டாக மாறி சமூக வலைதளங்களில் கண்டெண்ட்டாக மாறியது. தற்போது தெலுங்கு சினிமாக்களில் மீண்டும் கவனம் செலுத்தி வரும் தில் ராஜூ மற்றொருபுறம் தன் தனிப்பட்ட வாழ்விலும் கவனம் செலுத்தி வருகிறார்.


தற்போது 53 வயதாகும் தில் ராஜூவின் முதல் மனைவி அனிதா, சென்ற 2017ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து சில ஆண்டு கழித்து, சென்ற 2020ஆம் ஆண்டு வைக்யா எனும் பெண்ணை தில் ராஜூ இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 


குழந்தையின் முதல் பிறந்தநாள்


தில் ராஜூவுக்கு அவரது முதல் மனைவியுடன்  பிறந்த பெண்ணான ஹர்ஷிதா மூலம் ஏற்கெனவே பேரக்குழந்தை உள்ளது. இந்நிலையில் தன் தாயை இழந்து வாடிய தன்  தந்தை தில் ராஜூவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஹர்ஷிதா தான் ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. 


இந்தத் தம்பதிக்கு சென்ற ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்,  தில் ராஜூவின் குழந்தை அன்வி ரெட்டி இன்று தன் முதல் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இந்த விழாவில் ஏராளமான டோலிவுட் செலிப்ரிட்டிக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


 






சிரஞ்சீவி, மகேஷ் பாபு, வெங்கடேஷ், ராஷி கண்ணா, இயக்குநர் த்ரிவிக்ரம், கோபிசந்த் என பல செலிப்ரிட்டிகள் கலந்துகொண்ட இந்த விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.