அவசரத்தில் உதவி செய்து உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவருக்கு சைஃப் அலிகான் பணம் கொடுத்தார் தெரியுமா?

சில தினங்களுக்கு முன்பு திருடன் கத்தியால் குத்தியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஆட்டோ டிரைவருக்கு கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

Continues below advertisement

பாலிவுட்டில் நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சைஃப் அலிகானின் மும்பை வீட்டில் திருட வந்த திருடன் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியுள்ளார். வீட்டிற்குள் திருட வந்த திருடனுக்கும், வீட்டு வேலைக்கார பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தூங்கிக் கொண்டிருந்த சைஃப் அலிகான் எழுந்து வந்துள்ளார்.

Continues below advertisement

இதைத் தொடர்ந்து சைஃப் அலிகானுக்கும் திருடனுக்கும் இடையில் கடும் சண்டை ஏற்பட்ட நிலையில் திருடன் கத்தியால் சைஃப் அலிகானை 6 இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் போது சைஃப் அலிகானின் மனைவி கரீனா கபூர் வீட்டில் இல்லையாம். அதோடு, கார் டிரைவரும் வீட்டில் இல்லை. இதனால் சைஃப் அலிகான் தனது மகனுடன் ஆட்டோவில் லீலாவதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.


அவசர நேரத்தில் உதவி செய்ததற்காக அந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.11,500 சைஃப்  அலிகான் கொடுத்துள்ளார். லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சைஃப் அலிகான் நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் மூலமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரையில் ரூ.25 லட்சம் வரையில் இன்ஸூரன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கட்டப்பட்டுள்ளது. மீதி தொகையை டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட பிறகு மருத்துவமனையில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதுஒருபுறம் இருக்க இந்த சம்பவத்தின் போது கரீனா கபூர் வீட்டில் இருந்தாரா இல்லையா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. ஒரு சிலர் அவர் தூங்கிக் கொண்டிருந்தார் என்று கூறி வந்த நிலையில்  உண்மையில் அவர் வீட்டில் இல்லையாம். இந்த சம்பவத்தின் போது கரீனா கபூர் தனது சகோதரி மற்றும் தோழிகளுடன் வெளியில் சென்றுள்ளார். அவர் இல்லாத போது தான் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. 
சகோதரி மற்றும் தோழிகளுடன பார்ட்டி கொண்டாடிய கரீனா கபூர் இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட கரீனா கபூர், ரசிகர்கள் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola