சமீபகாலமாக நடிகை ஹீராவின் பேச்சு தான் சோஷியல் மீடியாவில் அடிபடுகிறது. இவர் நடிகை என்பதை தாண்டி, தல அஜித்தின் முன்னாள் காதலி ஆவார். முரளி நடித்த இதயம் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை ஹீரா. இந்தப் படத்திற்கு பிறகு நீ பாதி நான் பாதி, என்றும் அன்புடன், தசரதன், முன் அறிவிப்பு என்று பல படங்களில் நடித்தார், அஜித்துடன் இணைந்து காதல் கோட்டை, தொடரும் ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது அஜித்தை காதலித்தார். அஜித்தும் இவரை காதலித்தார். ஆனால் அந்த காதல் பிரிவில் முடியவே சினிமாவை விட்டு விலகினார்.
இந்த நிலையில் ஹீரா மற்றும் அஜித்தின் காதல் கதை பற்றி மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், சென்னையில் படித்த ஹீரா, மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால் மாடலிங் செய்து வந்தார். அதன் பிறகு அவர் இதயம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வர அந்தப் படத்தின் கதை அவருக்கு பிடித்துப் போக அவர் இதயம் படத்தில் நடித்தார்.
இந்தப் படம் கொடுத்த வரவேற்பு காரணமாக எல்லா மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். அப்போதுதான் சரத்குமார் உடன் இணைந்து நம்ம அண்ணாச்சி, பேண்ட் மாஸ்டர், முன் அறிவிப்பு, தசரதன் ஆகிய படங்களில் நடிக்கவே சரத்குமாருக்கு ஹீரா மீது காதல் மலர்ந்தது. அப்போது பேண்ட் மாஸ்டர் படத்தின் படிப்பிடிப்பு நடந்தது. நான் ஹீராவை பேட்டி எடுக்க சென்றிருந்தேன். சரத்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.
நான் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த போது சரத்குமார் இடை இடையில் வந்து கொண்டிருந்தார். மேலும், எப்போது பேட்டி முடியும் என்றெல்லாம் கேட்டு சென்றார். ஹீரா ஜாலியான டைப், அவர் எல்லோருடனும் ஜாலியாக பேசக் கூடியவர். மேலும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வந்தார். இது சரத்குமாருக்கு பிடிக்கவில்லை. ஏன் அப்படியெல்லாம் நெருக்கமான காட்சிகளில் எல்லாம் நடிக்கிறீர்கள் என்று ஹீராவிடம் கேட்க இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹீரா சரத்குமாருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
அப்போது தான் காதல் கோட்டை படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க, இருவருக்கும் இடையில் காதல் மலர, அஜித்தின் பெற்றோர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அது தான் அஜித்தின் பீக் டைம். அப்போதுதான் அவருக்கு நிறைய அட வாய்ப்பு வந்தது. இதனால், அஜித்தின் பெற்றோர் பிரபல தயாரிப்பாளரிடம் சென்று ஹீரா - அஜித் காதல் கதையை சொல்லியிருக்கின்றனர்.
நீங்கள் சொன்னால் தான் அஜித் கேட்பான் என்று சொல்லவே, அஜித்தை அழைத்து பேசிய அந்த தயாரிப்பாளர் அவருக்கு அட்வைஸூம் கொடுத்திருக்கிறார். அதே போன்று ஹீராவையும் கூப்பிட்டு இனிமேல் அஜித்துடன் சேர்ந்து அங்கும் இங்கும் சுற்றக் கூடாது. அவருடைய வாழ்க்கையிலும் இனிமேல் வரக் கூடாது என்று மிரட்டி அனுப்பியிருக்கிறார். இதன் காரணமாக அஜித்தும் ஹீராவும் பிரிந்தனர். அஜித்துடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து சினிமாவை விட்டு விலகினார். பின்னர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.