புஷ்பா 2:
அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா 2' படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முந்தய நாளன்று ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சி போடப்பட்டது. திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் தன்னுடைய குடும்பத்துடன் வந்த போது தான் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்தது.
புஷ்பா 2 படத்தை பார்க்க வாசலில் ஆவலோடு காத்திருந்த ரசிகை ரேவதி மற்றும் அவரின் 8 வயது மகன் இருவரும் அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் ஓடியபோது அதனை காவல் துறையினர் ஒழுங்கு படுத்தினர். அப்போது பல ரசிகர்கள் கூட்டமாக கீழே விழுந்ததில் ரேவதி மற்றும் அவரின் மகள் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரசிகையின் மரணம்:
35 வயதே ஆன ரேவதி உயிரிழந்த நிலையில், அவரது மகனும் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒருவாரத்திற்கு மேல் 8 வயது சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போதிலும் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். எனினும், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜாமீனுக்கான ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் அல்லு அர்ஜூன் ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் இருந்தார்.
ரேவத் ரெட்டி குற்றச்சாட்டு:
மறுநாள் ஆவணங்கள் கிடைக்கப் பெற்று சிறையிலிருந்து வெளியில் வந்தார். இந்த நிலையில் தான் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூன் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதில், போலிசார் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அல்லு அர்ஜூனை வர வேண்டாம் என்று கூறியும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தியேட்டருக்கு வந்ததே இச்சம்பவத்திற்கு காரணம் என்றார். அதோடு தான் தெலுங்கானாவில் முதல்வராக இருக்கும் வரையில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என்றார்.
இந்த நிலையில் சட்டசபையில் இச்சம்பவம் குறித்து பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்தது தெரிந்தும் படத்தை 3 மணி நேரம் முழுவதுமாக பார்த்து முடித்த பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன் தன்னுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம். இதற்காக தனி மனிதன் மீது குற்றம் சாட்டுவது நியாயமற்றது. தனது படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் போது கூட தன்னால் இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை என்று விளக்கம் கொடுத்தார்.
மனசாட்சி இல்லாத அல்லு அர்ஜுன்?
இந்த நிலையில் தான் ரசிகை உயிரிழந்தது தெரிந்தும் கூட 3 மணி நேரம் திரையரங்கில் அமர்ந்து தன்னுடைய குடும்பத்தோடு அல்லு அர்ஜுன் படத்தை பார்த்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் ரேவத் ரெட்டி சொல்வது போல், அல்லு அர்ஜுன் ரசிகை இறந்தது தெரிந்தும் மனசாட்சியே இல்லாமல் படம் பார்த்தாரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.