பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி - பவித்ரா மாரிமுத்து நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டைரி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இது ஒட்டு மொத்த டைரி படக்குழுவினரையும் சந்தோஷத்தில் உற்சாகமாகியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்பதால் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது. இந்த படத்திற்காக அதிகமான விளம்பரமும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டைரி ஓடிடி ரிலீஸ் :
இந்நிலையில் டைரி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் செப்டம்பர் 23 நாள் முதல் டைரி திரைப்படம் பிரபல ஓடிடி தளமான ஆஹா தமிழ் தளத்தில் வெளியாக இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் செப்டம்பர் 23 ஆம் தேதி சினிமா தினம் அனுசரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி சினிமா தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில, பிரம்மாஸ்திர திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
நன்றி தெரிவித்த அருள்நிதி !
மேலும் முன்னதாக 'டைரி' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அருள்நிதி அறிக்கையை வெளியிட்டு தனது நன்றியினை தெரிவித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சமீபத்தில் வெளியான டைரி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு மிக்க நன்றி. இப்படத்தின் தரத்தை உயர்த்த காரணமாக இருந்த தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் இயக்குனர் இன்னாசி பாண்டியனுக்கும் நன்றி. மேலும் படத்தின் இசையமைப்பாளர் ரான் ஈத்தன் மோஹன், சக நடிகர்கள், டெக்னிஷியன்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் அயராது உழைப்பு தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
டைரி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் உறுதுணையாய் இருந்த உதயநிதி ஸ்டாலின் அண்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து இரண்டு மாதங்களில் டி பிளாக், தேஜாவூ, டைரி என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியானது எதிர்ச்சியாக நடந்தது. இதில் எந்த ஒரு பிளானும் இல்லை. இந்த மூன்று படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது கூடுதல் சந்தோஷம்.
என் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள்,விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், சினிமா ரசிகர்கள், ஊடக நண்பர்கள், என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது போன்ற சிறந்த படங்களை தொடந்து கொடுக்க உழைப்பேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் அருள்நிதி.